May 6, 2024

“ஜெயகமு ஸ்ரீ லங்கா” நடமாடும் சேவை – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து சேவைகளையும் தமது பிரதேசங்களிலேயே நடமாடும் சேவையின் மூலம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வானது சித்திரை மாதம் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இதில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மானுச நானயக்கார மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு ஊக்குவிப்பு இராஜங்க அமைச்சர் கௌரவ ஜகத் புஷ்பகுமாரஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச […]

“ஜெயகமு ஸ்ரீ லங்கா” நடமாடும் சேவை – மன்னார் மாவட்டம் Read More »

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையானஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், கௌரவ ஆளுநரிடம் தெரிவிப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (06/05/2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனவும், 

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையானஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், கௌரவ ஆளுநரிடம் தெரிவிப்பு Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 கயிறு இழுத்தல் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான கயிறு இழுத்தல் போட்டி கடந்த 2024.05.05 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.தி. திரேஸ்குமார் அவர்கள், வவுனியா மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.ச. அரவிந்தன் மற்றும் விளையாட்டுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் வீரவீராங்கனைகளுக்கு கைலாகு கொடுத்து நிகழ்வினை ஆரம்பித்து

மாகாண விளையாட்டு விழா – 2024 கயிறு இழுத்தல் போட்டி Read More »

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் மது போதைக்கு எதிரான இயக்கம் நேற்று  (05/05/2024) நடாத்திய விழிப்புணர்வுக் கருத்தரங்கின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், சவால்களும் என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை ஒரு சவாலான விடயமாக காணப்படுவதாக இதன்போது உரையாற்றிய வடக்கு

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »