April 2024

கிராமிய கலைகளை வளர்ப்பதற்கான புதிய அணுகுமுறைகளை கலாசார உத்தியோகஸ்தர்கள் பின்பற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் புதுவருட கொண்டாட்டத்தில் தெரிவிப்பு

வடக்கு மாகாண புதுவருட கொண்டாட்டம் வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்று  (16/04/2024) நடைபெற்றது. கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். புத்தாண்டு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை கலாசார நிகழ்வுகளை கண்டுகளித்த கௌரவ ஆளுநர், பிரதம விருந்தினருக்கான உரையை ஆற்றினார். “இந்த வருடத்தில் வெற்றி அளிக்கக்கூடிய பயிர் செய்கையை வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ள முடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய குளங்கள் மற்றும் சிறு குளங்களின் நீர்மட்டம் […]

கிராமிய கலைகளை வளர்ப்பதற்கான புதிய அணுகுமுறைகளை கலாசார உத்தியோகஸ்தர்கள் பின்பற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் புதுவருட கொண்டாட்டத்தில் தெரிவிப்பு Read More »

தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக வவுனியாவில் ஒட்டுண்ணி விடுவிப்பு

அண்மைக் காலத்தில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக நாடு முழுவதும் தென்னைச் செய்கையில் வெண் ஈக்களின் (Aleurodicus disperse) தாக்கம் பாரிய அளவில் அவதானிக்கப்பட்டிருந்தது. இவ் வெண் ஈக்களின் தாக்கத்தை முகாமைத்துவம் செய்யும் முகமாக வெண் ஈக்களைத் தாக்கும் ஒட்டுண்ணி (Encarsia gaudulapae) விவசாயத் திணைக்களத்தினால் வடமாகாண தென்னம் தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 15.04.2024 ஆம் திகதியன்று வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் சமனன்குளம் விவசாயப்

தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக வவுனியாவில் ஒட்டுண்ணி விடுவிப்பு Read More »

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில், அரச மற்றும் தனியார் பஸ்களை பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் இன்று (15/04/2024) நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநர் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள்,

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில், அரச மற்றும் தனியார் பஸ்களை பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் Read More »

மங்களம் பொங்கும் தமிழ் – சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்

தமிழ் மக்களின் பாரம்பரியம், தொன்மை என்பவற்றுக்கு அமைய சித்திரை 14 ஆம் நாள் புது வருடம் பிறக்கிறது. அதற்கமைய இந்த ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி குரோதி எனும் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புது வருடத்தில் சாந்தியும், சமாதானமும் மேலோங்கி வறுமைகள் நீங்கி எல்லா வளங்களுடனும் அனைவரும் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இதேதினத்தில் சிங்கள மக்களும் தங்களின் புதுவருடப் பிறப்பை கொண்டாடுகின்றனர். பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில் இன, மத நல்லிணக்கத்தை மேலும் பறைசாற்றும் வகையில் ஒரு தேசிய

மங்களம் பொங்கும் தமிழ் – சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள் Read More »

வர்த்தக ரீதியிலான செவ்வாழைச்செய்கை என்னும் கருப்பொருளிலான வயல் விழா

கிளிநொச்சி மாவட்ட அன்புபுர வீதி, முழங்காவில் பகுதியில் உள்ள திரு.தம்பிப்பிள்ளை சேகர் அவர்களுடைய GAP Certified விவசாயப்பண்ணையில் ‘வர்த்தக ரீதியிலான செவ்வாழைச்செய்கை என்னும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வானது 03.04.2024 அன்று காலை 9.30 மணியளவில், திரு.மகானந்தன் மகிழன் (விவசாயப் போதனாசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி சுகந்தினி செந்தில்குமரன் (விவசாயப்பணிப்பாளர், வடக்கு மாகாணம்.) கலந்து கொண்டதுடன், பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி. ஜெகதீஸ்வரி சூரியகுமார், திருமதி. லோகா பிரதீபன்(சிரேஸ்ட விரிவுரையாளர்), கிளிநொச்சி

வர்த்தக ரீதியிலான செவ்வாழைச்செய்கை என்னும் கருப்பொருளிலான வயல் விழா Read More »

மஞ்சள் செய்கை வயல் விழா மற்றும் பயிர் சிகிச்சை முகாம் மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிய திட்டத்தின் ஊடாக 2023 ஆம்  ஆண்டு வழங்கப்பட்ட மஞ்சள் விதை கிழங்குகளை பெற்றுக்கொண்ட பெரியமடு விவசாய போதனாசிரியர் பிரிவில் பெரியமடு கிழக்கு கிராமத்தில் உள்ள விவசாயி திரு. யு. ஆ. சியான் மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திரு. ஊ. பசீலன் அவர்களின் விவசாய ஆலோசனைகளிற்கு அமைவாக மஞ்சள் செய்கையில் ஈடுபட்டிருந்தார். 7 மாதங்களின் பின்னர் அறுவடைக்கு தயாரான நிலையில் மேற்படி  மஞ்சள் செய்கையின் பலாபலன்களை ஏனைய விவசாயிகளிற்கும்

மஞ்சள் செய்கை வயல் விழா மற்றும் பயிர் சிகிச்சை முகாம் மன்னார் மாவட்டம் Read More »

இலவச சித்த மருத்துவ முகாம்

“எல்லோர்க்கும் சித்த மருத்துவம்” என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் ,ந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 16.03.2024 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடாத்தியது.இந்நிகழ்வில் யாழ் ,ந்தியத் துணைத்தூதரக உயர் அதிகாரி, வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளர்,

இலவச சித்த மருத்துவ முகாம் Read More »

சர்வதேச மகளிர்தினம் – 2024

2024ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர்தினமானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் 14.03.2024 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுவில் சித்த மத்திய மருந்தகத்தில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் மகளிரின் ஆரோக்கியத்தில் உணவின் முக்கியத்துவம் தொடர்பாக சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுகள், இயற்கைப்பானங்கள் மற்றும் மூலிகைக் கன்றுகள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டன. அத்துடன் சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற பெண் வைத்தியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை ஆகியோர் கௌரவிக்கப்பட்டு அவர்களிற்கு

சர்வதேச மகளிர்தினம் – 2024 Read More »

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துக்கள்.

சுமார் ஒருமாத காலமாக பசித்திருந்து, தாகித்திருந்து நோன்பு நோற்ற இஸ்லாமிய சகோதரர்கள், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டதும், ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒரு கடமையாகும். இந்தக் காலப்பகுதியில் வெறுமனே பசித்திருந்து, தாகித்திருப்பது மாத்திரமின்றி, இறையச்சத்தை தன்னகத்தே ஏற்படுத்திக் கொள்வதே நோன்பின் முக்கிய கடற்பாடாகும். புனித நோன்பு காலப்பகுதியில் ஏழைகளுக்கு உதவுதல்,

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துக்கள். Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்கவெளிதரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை லண்டன் கிளை இணைந்து ஏற்பாடு செய்த புதுவை பண்பாட்டு பெருவிழா நேற்று (06/04/2024) நடைபெற்றது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நிர்வாக ரீதியாகவும், மக்களின் தேவைகள் தொடர்பாகவும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில்  அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு காணப்படுவதாக

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்கவெளிதரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »