சவால்களை எதிர்கொள்ள தயார். – மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு
மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். அதற்கு அதிகாரிகளின் நேர்மையான செயற்பாடுகள் அவசியம் என கௌரவ ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார துறைசார்ந்த உயர் அதிகாரிகளுக்கும், கௌரவ ஆளுநர் அவர்களுக்கு ஆளுநர் செயலகத்தில் நேற்று (19/04/2024) நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். சுகாதார சேவையை முன்னெடுப்பதில், மாவட்ட ரீதியில் காணப்படும் இடர்பாடுகள் தொடர்பில் […]