April 10, 2024

மஞ்சள் செய்கை வயல் விழா மற்றும் பயிர் சிகிச்சை முகாம் மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிய திட்டத்தின் ஊடாக 2023 ஆம்  ஆண்டு வழங்கப்பட்ட மஞ்சள் விதை கிழங்குகளை பெற்றுக்கொண்ட பெரியமடு விவசாய போதனாசிரியர் பிரிவில் பெரியமடு கிழக்கு கிராமத்தில் உள்ள விவசாயி திரு. யு. ஆ. சியான் மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திரு. ஊ. பசீலன் அவர்களின் விவசாய ஆலோசனைகளிற்கு அமைவாக மஞ்சள் செய்கையில் ஈடுபட்டிருந்தார். 7 மாதங்களின் பின்னர் அறுவடைக்கு தயாரான நிலையில் மேற்படி  மஞ்சள் செய்கையின் பலாபலன்களை ஏனைய விவசாயிகளிற்கும் […]

மஞ்சள் செய்கை வயல் விழா மற்றும் பயிர் சிகிச்சை முகாம் மன்னார் மாவட்டம் Read More »

இலவச சித்த மருத்துவ முகாம்

“எல்லோர்க்கும் சித்த மருத்துவம்” என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் ,ந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 16.03.2024 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடாத்தியது.இந்நிகழ்வில் யாழ் ,ந்தியத் துணைத்தூதரக உயர் அதிகாரி, வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளர்,

இலவச சித்த மருத்துவ முகாம் Read More »

சர்வதேச மகளிர்தினம் – 2024

2024ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர்தினமானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் 14.03.2024 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுவில் சித்த மத்திய மருந்தகத்தில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் மகளிரின் ஆரோக்கியத்தில் உணவின் முக்கியத்துவம் தொடர்பாக சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுகள், இயற்கைப்பானங்கள் மற்றும் மூலிகைக் கன்றுகள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டன. அத்துடன் சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற பெண் வைத்தியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை ஆகியோர் கௌரவிக்கப்பட்டு அவர்களிற்கு

சர்வதேச மகளிர்தினம் – 2024 Read More »

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துக்கள்.

சுமார் ஒருமாத காலமாக பசித்திருந்து, தாகித்திருந்து நோன்பு நோற்ற இஸ்லாமிய சகோதரர்கள், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டதும், ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒரு கடமையாகும். இந்தக் காலப்பகுதியில் வெறுமனே பசித்திருந்து, தாகித்திருப்பது மாத்திரமின்றி, இறையச்சத்தை தன்னகத்தே ஏற்படுத்திக் கொள்வதே நோன்பின் முக்கிய கடற்பாடாகும். புனித நோன்பு காலப்பகுதியில் ஏழைகளுக்கு உதவுதல்,

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துக்கள். Read More »