முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்கவெளிதரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை லண்டன் கிளை இணைந்து ஏற்பாடு செய்த புதுவை பண்பாட்டு பெருவிழா நேற்று (06/04/2024) நடைபெற்றது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நிர்வாக ரீதியாகவும், மக்களின் தேவைகள் தொடர்பாகவும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு காணப்படுவதாக […]