April 2, 2024

Red Lasoda உள்ளுர் இன உருளைக்கிழங்கு முன்மாதிரி துண்ட வயல்விழா

யாழ் மாவட்டத்தில் பெரும்போகம் 2023/2024 இல் உருளைக்கிழங்கு செய்கையில் உள்ளுர் விதை கிழங்கினை நடுகைக்கு பயன்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகளை கண்டறிவதற்காக மத்திய விவசாயத் திணைக்களத்தினால் 732 kg ரெட் லசோடா உள்ளுர் விதை கிழங்கு சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன் , நீர்வேலி , உரும்பிராய், புத்தூர், ஆவரங்கால் , அச்சுவேலி மற்றும் வசாவிளான் விவசாயப்போதனாசிரியர் பிரிவுகளில் முன்மாதிரி துண்டமாகச் செய்கை பண்ணப்பட்டது. இவ்விதை உருளைக்கிழங்கானது சீதா எலிய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இழைய வளர்ப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்டு இழைய […]

Red Lasoda உள்ளுர் இன உருளைக்கிழங்கு முன்மாதிரி துண்ட வயல்விழா Read More »

CRIWMP திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட எள்ளு செய்கை வயல் விழா – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் CRIWMP திட்டத்தின் உதவியுடன் விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் மாவட்டத்தில் எள்ளு செய்கையை முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 67 பயனாளிகளிற்கு 1/2 ஏக்கர் வீதம் ANKSE-4 வர்க்க எள்ளு விதைகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் வஞ்சியன்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் கள்ளியடிப்பிட்டி கிராமத்தில் திரு. மயில்கண்ணன் எனும் விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டு 1.5 கிலோ கிராம் எள்ளு விதைகள் வழங்கப்பட்டு மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திருமதி து. ஆ. ஸ்ரெல்லா விவசாய ஆலோசனைகளிற்கு அமைவாக எள்ளு

CRIWMP திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட எள்ளு செய்கை வயல் விழா – மன்னார் மாவட்டம் Read More »

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு 2024

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் மாணவர் பாராளுமன்ற எண்ணக்கருவுக்கு அமைய, கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பாராளுமன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த நாடளாவிய ரீதியில் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதன் இறுதிக்கட்டத்தை குறிக்கும் வகையில் இந்த தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள்

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு 2024 Read More »

கண் சுகாதாரம்தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கை நாளை (03) ஆரம்பம்

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை (03) ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய, கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் செயற்பாடுகளை, வலயக் கல்வி பணிமனைகளூடாக நாளை முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் ஏனைய மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ளன. ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் ஊடாக பாடசாலைகளில் மாணவர்களின் பார்வை திறன் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், உரிய மாணவர்கள் பார்வை தொடர்பான சிகிச்சைகளுக்கு

கண் சுகாதாரம்தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கை நாளை (03) ஆரம்பம் Read More »