March 2024

வல்வை முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளைஉடனடியாக நிறுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் விடுத்த பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வல்வை முதியோர் இல்லம் எவ்வித வசதிகளும் இன்றியும்  இதுவரை பதிவு செய்யாமலும் இயங்கியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வல்வை முதியோர் இல்லம் தொடர்பில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் […]

வல்வை முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளைஉடனடியாக நிறுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை Read More »

இலங்கை விமானப்படையின் கண்காட்சிக்கூடம்வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்து வைப்பு

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு  யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று (06.03.2024) திறந்துவைத்தார். இலங்கை விமானப்படையின், படைத் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன, வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன்பந்துலசேன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையின் ஆற்றிய கௌரவ ஆளுநர்,  இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு

இலங்கை விமானப்படையின் கண்காட்சிக்கூடம்வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்து வைப்பு Read More »

வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும்சவால்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் எடுத்துரைப்பு.

சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், கொழும்பு சுவசெரிபாயவில் அமைந்துள்ள சுகாதார  அமைச்சில் இன்று (05.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாணத்தில் சுகாதார துறைக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால் சுகாதார துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால், சுகாதார அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது. வடக்கில் இதுவரை நிரப்பப்படாத ஆளணி மற்றும் ஆளணி வெற்றிடங்களுக்கான மாற்றீடுகள் தொடர்பில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என

வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும்சவால்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் எடுத்துரைப்பு. Read More »

காணி விடுவிப்பு தொடர்பில் வடக்கு மாகாணகௌரவ ஆளுநர், பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்னவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (05.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, மீள்குடியேற்றம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு விடுவிப்பது தொடர்பில் கௌரவ ஆளுநரினால் பாதுகாப்புச் செயலாளரிடம் எடுத்துக்கூறப்பட்டதற்கு அமைவாக, காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாம் பரிந்துரைகளை அனுப்புவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்ன, வடக்கு மாகாண

காணி விடுவிப்பு தொடர்பில் வடக்கு மாகாணகௌரவ ஆளுநர், பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை Read More »

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஊராட்சி முற்றக்கூட்டங்கள் இடம்பெற்றன

மார்ச் 1, 2024 அன்று, வவுனியா மற்றும் முல்லைத்தீவில் உள்ள மாவட்டச் செயலகங்களில் தனித்தனியாக இரண்டு ஊராட்சி முற்றக் (Town Hall) கூட்டங்கள் நடைபெற்றன. பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளுர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன. வவுனியாவில் நடைபெற்ற கூட்டம் வடக்கு மாகாண

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஊராட்சி முற்றக்கூட்டங்கள் இடம்பெற்றன Read More »

ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாண செயற்றிட்டம் ஆரம்பம்

ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாணத்திற்கான செயற்றிட்டம், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் இன்று (04.03.2024) ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ZOOM ஊடாக கௌரவ ஆளுநர் கலந்துக்கொண்டார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், யாழ் இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். தரம் ஒன்று மாணவர்களுக்கு ஆங்கில தொடர்பாடல் முறையை அறிமுகப்படுத்தும் தேசிய

ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாண செயற்றிட்டம் ஆரம்பம் Read More »

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும்,வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (01.03.2024) மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய புதிய முதலீடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வது

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும்,வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் மற்றுமொரு சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு அச்சுவேலியில் நடைபெற்றது

வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் கௌரவ ஆளுநரின் சிநேகபூர்வ மக்கள் சந்திப்பின் மற்றுமொரு கட்டம் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நேற்று (29.02.2024) நடைபெற்றது. கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் அச்சுவேலி சென்தேரேசா மகளிர் கல்லூரியில் இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது, அச்சுவேலி பகுதியை சேர்ந்த பல சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர். வீதி சீரின்மை, பொது போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படாமை, நூலக வசதியின்மை, வெள்ள அபாயம் உள்ளிட்ட

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் மற்றுமொரு சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு அச்சுவேலியில் நடைபெற்றது Read More »

பெண்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் அழைப்பு

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பியோ ஸ்மித், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள கௌரவ ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூகங்கள் மீது கவனம் செலுத்தி பாலியல் மற்றும் குடும்பதிட்ட ஆரோக்கியம், பெண்களுக்கான  உரிமைகள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சிவில்

பெண்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் அழைப்பு Read More »

அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல. பொதுமக்களின் சேவகர்கள் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் மீண்டும் வலியுறுத்தல்.

வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் இன்று (01.03.2024) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  அவர்களினால், கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இணையதளங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் புதிய இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன,  உள்ளுராட்சி ஆணையாளர் எஸ். பிரணவநாதன், உதவி ஆணையாளர்கள், செயலாளர்கள்

அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல. பொதுமக்களின் சேவகர்கள் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் மீண்டும் வலியுறுத்தல். Read More »