March 19, 2024

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைமை அதிகாரி அலெக்ஸாண்டர் புரோவ் (Aleksandr Burov), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று  (19.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பில் இதன்போது கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு Read More »

பரசூட் முறை மூலமாக நாற்றுநடுகை வயல் விழா – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தின் 2023/24 காலபோகத்தில் குளங்கள் மற்றும் கிராமங்கள் மறுமலர்ச்சி (CRIWMP) திட்டத்தின் உதவியுடன் விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் பரசூட் முறையை ஊக்கவிக்கும் முகமாக 20 ஏக்கர்களில் பரசூட் முறை மூலம் நடுகை செய்யப்பட்டது. அதற்கமைவாக ஆட்காட்டிவெளி விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் வரும் இசங்கன்குளம் பகுதியில் விவசாய போதனாசிரியர் செல்வி ஞா. கஜகர்ணியின் ஆலோசனைகளுக்கு அமைவாக திரு க.வேதநாயகம் எனும் விவசாயி குறித்த முறைமூலம் நெற்செய்கை மேற்கொண்டிருந்தார். மேற்படி நெற்செய்கையின் முன்னேற்றத்தினை ஏனைய விவசாயிகள்

பரசூட் முறை மூலமாக நாற்றுநடுகை வயல் விழா – மன்னார் மாவட்டம் Read More »