March 12, 2024

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்பகட்ட கள ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை நேற்று (12.03.2024) மாலை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார துறையின் முதலாம் நிலை செயலாளரின் தலைமையில் குறித்த நிபுணர்கள் குழாம் கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண மக்களின் தற்போதைய வாழ்வியல் செயற்பாடுகள், பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு வசதிகள், சமுத்திர […]

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டட  நோயாளர் விடுதி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் நேற்று (11.03.2024) மாலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்கள், அதிகாரிகள், நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். நோயாளர் விடுதியை பார்வையிட்ட கௌரவ ஆளுநர், முதலாவது நோயாளரையும் விடுதியில் அனுமதித்தார். இதன்போது நிகழ்வின் பிரதம விருந்தினருக்கான உரையை ஆற்றிய கௌரவ ஆளுநர், வடக்கு

இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்துவைப்பு Read More »

வட மாகாண மஹா சிவராத்திரி நிகழ்வு– 2024

உருத்திரபுரநாயகி உடனுறை உருத்திரபுரீசுவரர் ஆலயம் – கிளிநொச்சி. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு, கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உருத்திரபுரீசுவரர் ஆலய  பரிபாலன சபையுடன் இணைந்து நடாத்திய வடக்கு மாகாண மஹா சிவராத்திரி நிகழ்வு 2024.03.08ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00மணிக்கு உருத்திரபுரீச்சுரர் ஆலய  முன்றலில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் ம.பற்றிக் டிறஞ்சன்  அவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. மாலை 6.00மணிக்கு

வட மாகாண மஹா சிவராத்திரி நிகழ்வு– 2024 Read More »

யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கூட்டம் இடம்பெற்றது

யாழ் மாவட்டச் செயலகத்தில் ஊராட்சி முற்றக் (Town Hall) கூட்டம் 05 மார்ச் 2024 அன்று நடைபெற்றது. பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் இணைத் தலைமையில் இக்கூட்டம் நடாத்தப்பட்டது. இக் கூட்டத்திற்கு வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.

யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கூட்டம் இடம்பெற்றது Read More »