March 2024

கௌரவ ஆளுநரின் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்

“அவர் இறந்தார். பாவத்தை ஒழிக்க ஒரேயொருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்”  –  உரோ. 6 : 10 மானிட குலத்தை மீட்பதற்காக மனித உருவெடுத்துவந்த இறைமகன் கிறிஸ்து, மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இந்த உன்னதமான நாளை கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினமாக கொண்டாடுகின்றனர். “சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவை சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்படிந்தவரானார்” என்ற திருவிவிலிய வாக்கியத்திற்கு அமைய, அடிமைத்தன  ஆதிக்கம் செலுத்திய காலத்தில் மீட்பு, சமாதானம், சமத்துவம், அன்பு, நட்புறவு என அனைத்தையும் […]

கௌரவ ஆளுநரின் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் Read More »

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் நேற்று  (28.03.2024) நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய கௌரவ வடக்கு மாகாண ஆளுநர், அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படும் என பாதுகாப்பு

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

தமது அடிப்படை தேவைகளை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும். – யாழ் பல்கலைக்கழகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் பெண்கள் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்ப முன்னர், தமது அடிப்படை தேவைகளை தயக்கமின்றி தெரிவிப்பதற்கும், அதற்கான உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் பெண்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என கௌரவ ஆளுநர் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின நிகழ்வு, மருத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று  (27.03.2024) நடைபெற்றது.

தமது அடிப்படை தேவைகளை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும். – யாழ் பல்கலைக்கழகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்திபுலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். – அவுஸ்திரேலியஉயர்ஸ்தானிகரிடம் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்  பவுல் ஸ்டீபன் (Paul Stephens) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை 27.03.2024 அன்று சந்தித்து கலந்துரையாடினார். கௌரவ ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், கௌரவ ஆளுநருக்கு தெளிவுப்படுத்தினார். அத்துடன் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து  கொண்டார். வடக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை

வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்திபுலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். – அவுஸ்திரேலியஉயர்ஸ்தானிகரிடம் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு Read More »

அரசாங்க படசாலைகளில் அனைத்து ஆரம்ப தரங்களின் மாணவர்களுக்கும்“ பாடசாலை உணவுத் திட்டத்தை” செயல்படுத்தல்

 “2024 ஆம் ஆண்டு முதல் அரசாங்க பாடசாலைகளில் அனைத்து ஆரம்ப தரங்களின் மாணவர்களுக்கும் பாடசாலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான” தேசிய திட்ட எண்ணக்கருவிற்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதியினால் 25.03.2024 ஆம் திகதி கொழும்பு சுஜாத்தா மகளீர் கல்லுரியில் குறித்த திட்டம் செயற்படுத்தப்பட்டது. அதற்கு இணையாக மாகாண செயற்குழுக்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் பங்குபற்றுதலுடன்  மாகாண மட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு  யா/கொக்குவில் ஸ்ரீ ஞானபண்தடித வித்தியாசாலையில் கெளரவ ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் தலைமையில் 25.03.2024

அரசாங்க படசாலைகளில் அனைத்து ஆரம்ப தரங்களின் மாணவர்களுக்கும்“ பாடசாலை உணவுத் திட்டத்தை” செயல்படுத்தல் Read More »

Women Plus Bazaar 2024 கண்காட்சியின் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்கலந்து சிறப்பித்தார்.

இலங்கைக்கான எகிப்து தூதரகத்தால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட Women Plus Bazaar 2024 கண்காட்சியின் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள One Galle Face சிறப்பு அங்காடி தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சி கூடத்தை, ஏனைய அதிதிகளுடன் இணைந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சி கூடத்தையும் பார்வையிட்டார். நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களின் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில்

Women Plus Bazaar 2024 கண்காட்சியின் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்கலந்து சிறப்பித்தார். Read More »

செத்தல் மிளகாய் உற்பத்தி வயல் விழா- மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் மத்திய விவசாயத் திணைக்கள நிதி உதவியுடன் மாகாண விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் மாவட்ட ரீதியில் செத்தல் மிளகாய் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 240 பயனாளிகளிற்கு 0.25 ஏக்கர் வீதம் MICH Hy-1 வர்க்க மிளகாய் விதைகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் கொண்டச்சி விவசாய போதனாசிரியர் பிரிவில் திரு. ந. நலீன் எனும் விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டு, 50 கிராம் விதை மிளகாய் வழங்கப்பட்டு மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திருமதி டிவைனி பீரீஸின் விவசாய

செத்தல் மிளகாய் உற்பத்தி வயல் விழா- மன்னார் மாவட்டம் Read More »

நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் – வவுனியா மாவட்டம்

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் காலை 5 மணி முதல் 7.30 மணிவரை வவுனியா பொதுச்சந்தை முன்றலில் 01.03.2024 தொடக்கம் நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் நடைபெற்று வருகின்றது. இக் கருத்துருவானது CABI என அழைக்கப்படும் “Center for Agriculture & Bio Science International ” நிறுவனத்தினால் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முன்னோடித் திட்டமாக சில தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இது வெற்றியளிக்கப்பட்டிருந்ததன் விளைவாக இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் பயிர்ச்சிகிச்சை முகாமாகவும், நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாமாகவும்

நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் – வவுனியா மாவட்டம் Read More »

தாவர தனிமைப்படுத்தல் அலகு யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு.

தாவர மற்றும் தாவர உற்பத்திகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான தனிமைப்படுத்தல் அலகொன்று யாழ்ப்பாணம் தபால் நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்தல் அலகை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து கடந்த 22 ஆம் திகதி திறந்து வைத்தார். இலங்கையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான தாவர தனிமைப்படுத்தல் அலகானது கட்டுநாயக்கவில் மாத்திரமே காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது யாழ்ப்பாண தபால் நிலையத்திலும்  தாவர தனிமைப்படுத்தல் அலகு திறந்து வைக்கப்பட்டமையானது வடமாகாணத்தில் தாவர ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில்

தாவர தனிமைப்படுத்தல் அலகு யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு. Read More »

பருத்தித்துறைஆதார வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் திறப்பு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  சுமார் 4000 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. புதிய கட்டடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள், குருதி சுத்திகரிப்பு பிரிவு, கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவு,

பருத்தித்துறைஆதார வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் திறப்பு Read More »