February 2024

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை செயற்றிட்டம் – 2024

2024 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள சுதந்திர தின நினைவு நாளுக்கு இணையாக 2024.02.01 ம் திகதியிலிருந்து 2024.02.07 திகதி வரை பத்து இலட்சம் மருத்துவச்செடிகள் ‘சுவதரனி மருத்துவ செய்கை வாரம்’ பெயரில் நாடு முழுவதும் நடுகை செய்யும் தேசிய மர நடுகை வேலைத்திட்டம் பிரதமர் அவர்களின் தலைமையில் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டமானது மாகாண பிரதம செயலாளரின் மேற்பார்வையின் கீழ் மாகாண ஆயுர்வேத ஆணையாளர்களின் ஒழுங்குபடுத்தலில், அனைத்து பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின் […]

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை செயற்றிட்டம் – 2024 Read More »

பயிற்சி கருத்தரங்குகளை தவிர்த்து,செயற்பாட்டு திட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு.

எதிர்வரும் காலங்களில் பயிற்சி கருத்தரங்குகளை தவிர்த்து, இதுவரை வழங்கப்பட்ட பயிற்சிகளை கொண்டு செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் செயற்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற  தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாணத்திலுள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோருடன், கௌரவ ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (31.01.2024) இடம்பெற்றது. அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கடந்த வருடத்தில் மாத்திரம் 3187.649 (மூவாயிரத்து நூற்று எண்பத்தேழு தசம் ஆறு நான்கு ஒன்பது)

பயிற்சி கருத்தரங்குகளை தவிர்த்து,செயற்பாட்டு திட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின், சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு ஆரம்பம்.

மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கிராமங்களுக்கே சென்று ஆராயும் நடவடிக்கையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் ஆரம்பித்துள்ளார். பல கிராமங்களின் மக்களை சனசமூக நிலையங்களூடாக ஒன்றிணைத்து, அவர்களுடன் கௌரவ ஆளுநர் சந்திப்புக்களை நடத்த வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய முதலாவது சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கு, பூம்புகார் பகுதியில் நேற்று மாலை  (30.01.2024) நடைபெற்றது. அரியாலை கிழக்கு, பூம்புகார், நாவலடி, மணியந்தோட்டம், உதயபுரம் ஆகிய கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனசமூக நிலையங்களின்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின், சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு ஆரம்பம். Read More »