February 2024

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் வடக்குமாகாணத்திலேயே முதலில் நிறைவு செய்யப்பட்டதாக இராஜாங்க நிதி அமைச்சர் தெரிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இராஜாங்க நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் இன்று (13.02.2024) நடைபெற்றது. கொழும்பு – 01 இல் அமைந்துள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் புதிய கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.   இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களும் கலந்துக்கொண்டார். அஸ்வெசும நலன்புரி திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னேடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. […]

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் வடக்குமாகாணத்திலேயே முதலில் நிறைவு செய்யப்பட்டதாக இராஜாங்க நிதி அமைச்சர் தெரிவிப்பு Read More »

யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நடவடிக்கை

சுமார் 18 வருடங்களாக புனரமைக்கப்படாத யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். கிராம மக்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைக்கு அமைய, சுமார் 2.34 கிலோமீற்றர் வீதியை புனரமைப்பு செய்வது தொடர்பில் உள்ளுராட்சிமன்ற ஆணையாளருக்கு, கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார். அதற்கமைய, சாவகச்சேரி பிரதேச சபையினால் வீதி புனரமைப்பிற்கான மதீப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை முழுமையாக புனரமைக்க 42 மில்லியன் ரூபா

யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நடவடிக்கை Read More »

மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணி பற்றாக்குறை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் 02 மகப்பேற்று விடுதிகள் புனரமைக்கப்பட்டு மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கை இன்று (09.02.2024)  முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நலன்புரி சங்கத்தின் லண்டன் கிளை அங்கத்தவர்களின் 38 மில்லியன் ரூபா நிதி அனுசரணையுடன்  மகப்பேற்று விடுதிகள் புனரமைக்கப்பட்டன. புனரமைக்கப்பட்ட விடுதிகளை மக்கள்மயப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பங்கேற்புடன் இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள், தாதியர்கள்,  மன்னார்

மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணி பற்றாக்குறை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வவுனியா மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!

வவுனியா மாவட்டத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 08.02.2024 அன்று வவுனியா மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த எட்டு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், வவுனியா மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர், வவுனியா நகர பெண் அபிவிருத்தி

வவுனியா மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு! Read More »

மன்னார் மாவட்டத்தில பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

மன்னார் மாவட்டத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 08.02.2024 அன்று மன்னார் மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் கு.காஞ்சனா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பதினொரு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர், மன்னார் நகர பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், மன்னார் மாவட்ட சமூகசேவைகள்

மன்னார் மாவட்டத்தில பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு! Read More »

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் என நெதர்லாந்து துணைத்தூதுவர் தெரிவிப்பு

நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று (08.02.2024) சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கௌரவ ஆளுநர் தெளிவுப்படுத்தினார். விடயங்களை கேட்டறிந்த நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens),, குடாநாட்டிற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் என நெதர்லாந்து துணைத்தூதுவர் தெரிவிப்பு Read More »

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைசாவல்கட்டு மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (08.02.2024) சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். காக்கைத்தீவு கடற்கரையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துப்பரவு செய்துக்கொள்வதற்கும், மீன்பிடி துறையை மேம்படுத்திக்கொள்வதற்கும் உரிய அனுமதிகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கைகளை கௌரவ ஆளுநரிடம் முன்வைத்தனர். ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைசாவல்கட்டு மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 06.02.2024 அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சில் அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த பதினேழு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாண மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு Read More »

நியமனங்களின் அடிப்படையில் ஆசிரியர்களை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் வவுனியா கலாசார மண்டபத்தில் 06.02.2024 அன்று  நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், மத்திய கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாண அமைச்சின் அதிகாரிகள், கல்வித்துறைசார் உத்தியோகஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக

நியமனங்களின் அடிப்படையில் ஆசிரியர்களை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

பொதுமக்களுக்கானசேவையை உரியவாறு நிறைவேற்றுவதே அரச உத்தியோகஸ்தர்களின் கடமை என வடக்கு மாகாண கௌரவஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்கேற்புடன், யாழ் மத்திய கல்லூரியில் இன்று (05.02.2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மத்திய அமைச்சின் உயர் அதிகாரிகள், மாகாண அமைச்சின் அதிகாரிகள், கல்வித்துறைசார் உத்தியோகஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலேயே இன்றைய

பொதுமக்களுக்கானசேவையை உரியவாறு நிறைவேற்றுவதே அரச உத்தியோகஸ்தர்களின் கடமை என வடக்கு மாகாண கௌரவஆளுநர் வலியுறுத்தல் Read More »