February 2024

தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் உறுதி

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (28.02.2024) இந்த சந்திப்பு நடைபெற்றது. மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் இதன்போது இந்திய துணைத் தூதுவருக்கு தெளிவுப்படுத்தினார். அதற்கமைய, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும் […]

தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் உறுதி Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வவுனியா

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகர பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 17 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (DYB) பயிற்சி நெறியானது 15.02.2024 தொடக்கம் 17.02.2024 வரை 3 நாட்கள் வவுனியா நகர பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.கொ.அன்ரன் ஜெகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் முதன்மை வளவாளராகவும் திரு.ப.ராகவன், தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இந் நிறைவு நிகழ்வில்

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வவுனியா Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவு

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 20 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 20.02.2024 தொடக்கம் 22.02.2024 வரை 3 நாட்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.நி.சுந்தரவதனி, அபிவிருத்தி உத்தியோகத்தர் முதன்மை வளவாளராகவும் மற்றும் திருமதி.க.துஷயந்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் பல்வேறு

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவு Read More »

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கான பொதியிடல் பயிற்சி

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சிறந்த முறையில் பொதி செய்து வியாபாரம் செய்வதற்கு ஏற்ற வகையில் EX-PACK CORRUGATED CARTONS PLC  நிறுவனத்தினால் 20.02.2024 செவ்வாய்க்கிழமை கிறீன்கிறாஸ் ஹோட்டலில் பயிற்சிநெறி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு மு.ஸ்ரீமோகன் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) யாழ்ப்பாண மாவட்டம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். குறித்த பயிற்சி நெறியில் வடமாகாணத்தை சேர்ந்த 31 தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டு நவீன முறையிலான கார்போட் பொதி செய்தல்

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கான பொதியிடல் பயிற்சி Read More »

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம்

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 17 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 13.02.2024 தொடக்கம் 15.02.2024 வரை 3 நாட்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.சிறிஸ்கந்தராசா கௌசிகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் முதன்மை வளவாளராகவும் திரு.புண்ணியமூர்த்தி கயலவன், அபிவிருத்தி உத்தியோகத்தர் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் பல்வேறு

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் Read More »

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் – வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் அறிவித்துள்ளார். அத்துடன் பொலிசாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக தமது அதிகார சபையின் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் – வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை Read More »

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில்மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவஆளுநர் பணிப்புரை

யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்துக்கொண்ட புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு பாடசாலை அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிமனைக்கு கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் பிரிவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் மாணவன் ஆகியோரிடம்

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில்மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவஆளுநர் பணிப்புரை Read More »

இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சி இன்றியமையாத தேவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தில் பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான சான்றிதழ், சீருடை வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஆறு மாத NVQ சான்றிதழ் மற்றும் மூன்று வருடங்களுக்கான தாதியர் பயிற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கான சான்றிதழ்கள் கௌரவ ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டதுடன் விசேட உரையும் நிகழ்த்தப்பட்டது. இளைஞர், யுவதிகளுக்கு தற்போது தொழிற்பயிற்சியை பெற்றுக்கொடுக்க வேண்டும். கல்வி பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரம்

இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சி இன்றியமையாத தேவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடமராட்சி பிரதேசத்தின் உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் கௌரவ ஆளுநரின் சிநேகபூர்வ மக்கள் சந்திப்பின் மற்றுமொரு கட்டம் வடமராட்சியில் நடைபெற்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு நடைபெற்றது. வடமராட்சி பிரதேசத்தில் காணப்படும் உள்ளக வீதிகள் சீரின்மை தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள் கௌரவ ஆளுநரிடம் இதன்போது முன்வைக்கப்பட்டன. அத்துடன் விளையாட்டு மைதானம் சீரின்மை, வீதிகளுக்கான மின் விளக்குகள் பொருத்தப்படாமை, சனசமூக நிலையங்களின்

வடமராட்சி பிரதேசத்தின் உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 Cross Country Race

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான Cross Country Race  போட்டி கடந்த 2024.02.17 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்ப இறுதி நிகழ்வில் வவுனியா மாவட்ட மாவட்டச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்கள உதவி பணிப்பாளர், விளையாட்டுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.அத்துடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பி.ஏ சரத்சந்திர அவர்கள் வீராவீராங்கனைகளுக்கு கைலாகு கொடுத்து நிகழ்வினை

மாகாண விளையாட்டு விழா – 2024 Cross Country Race Read More »