January 2024

யாழ் மாவட்டபண்பாட்டு விழாவில் வடக்கு மாகாண கௌரவஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்அவர்கள் கலந்துசிறப்பித்தார்

வடமாகாணபண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த யாழ் மாவட்ட பண்பாட்டு விழா இன்று (30.01.2024) நடைபெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்அவர்கள் கலந்து சிறப்பித்தார். பண்பாட்டு ஊர்வலத்துடன்அதிதிகள் அரங்கிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதன்போது கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன்,கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர். வடக்குமாகாணம் என்ற ரீதியில் மிக திறமையாக செயற்படும் அனைத்துகலைஞர்களையும்தலைவணங்கி வரவேற்பதாகவும், கலை, கலாசார விழுமியங்களைமீட்டெடுக்க வேண்டியவர்களாகவும், மாகாணத்தில் அவற்றை வாழ […]

யாழ் மாவட்டபண்பாட்டு விழாவில் வடக்கு மாகாண கௌரவஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்அவர்கள் கலந்துசிறப்பித்தார் Read More »

இந்தியகுடியரசுதின நிகழ்வின் சிறப்புஅதிதியாக வடக்குமாகாண ஆளுநர் பங்கேற்பு

பாரதநாட்டின்  75வது குடியரசு தின நிகழ்வு இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 26.01.2024 அன்று  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக வடக்கு மாகாண கெளரவ ஆளுநர்  பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இலங்கைக்கும் இந்தியாவிற்குமான பிணைப்பு என்பது நீண்டநெருங்கிய ஒன்றாக காணப்படுவதாக இதன்போது சிறப்புரை ஆற்றிய ஆளுநர் குறிப்பிட்டார். இலங்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உதவிக்கரம் நீட்டும் முதல் நண்பனாக இந்தியா திகழ்வதாகவும்

இந்தியகுடியரசுதின நிகழ்வின் சிறப்புஅதிதியாக வடக்குமாகாண ஆளுநர் பங்கேற்பு Read More »

முல்லைத்தீவு கோவிலின் காணிப்பிரச்சினை தொடர்பில் ஆளுநர் ஆய்வு செய்தார்

முல்லைத்தீவு  துணுக்காய் பாணலிங்கேஸ்வரம் அருள்மிகு நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப்பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார். ஆலயத்தின் நான்கு திக்கு இராஐகோபுரங்களுக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், திருக்குடமுழுக்கு நன்னீராட்டுவிழாவும் இன்று இடம்பெற்றது. இராஐ கோபுரங்களுக்களுக்கான அடிக்கல் நாட்டுவிழாவின் பிரதம அதிதியாக வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார். ஆலய காணிப்பிப்பிரச்சனை உள்ளிட்ட சிக்கல்கள்  தொடர்பில் இதன்போது ஆலய நிர்வாகத்தினரால் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. நர்மதா நதீஸ்வரர்

முல்லைத்தீவு கோவிலின் காணிப்பிரச்சினை தொடர்பில் ஆளுநர் ஆய்வு செய்தார் Read More »

ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் உள்நோயாளர்களின் யாழ் மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இயங்கும் மாவட்ட சித்த வைத்தியசாலையின் சேவையினை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய கட்டடத் தொகுதி வடமாகாண ஆளுநர்  கெளரவ பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களால் இன்று (23.01.2024) திறந்துவைக்கப்பட்டது. இந்த புதிய கட்டடத்தில் இனிவரும் காலத்தில் இலவச சேவையினை இயக்கவும், அதேபோல முன்னர் இலவச சேவை இடம்பெற்ற இடத்தில் கட்டண சேவையினை இயக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட மக்களிடையே உள்ளுர் மருந்துகளுக்கு அதிக வரவேற்பு உள்ள நிலையில் நோயாளர்களின் வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் முன்னடுக்கப்பட்ட இந்தப் செயற்திட்டத்துக்கு

ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் உள்நோயாளர்களின் யாழ் மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது Read More »

மகளிர் விவகார அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 22 ஜனவரி 2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஏழு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தின் சமூகசேவை உத்தியோகத்தர்கள்,

மகளிர் விவகார அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு Read More »

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை வடக்கு மாகாண ஆளுநர் சந்தித்து கலந்துரையாடினார்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு மாகாண  கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் , அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கௌரவ ஆளுநரால் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிபுரியும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை வடக்கு மாகாண ஆளுநர் சந்தித்து கலந்துரையாடினார் Read More »

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி மகளிர் விவகார அமைச்சினால் வழங்கி வைப்பு!

கிளிநொச்சியில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 19.01.2024 அன்று கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பதினொரு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். குறித்த நிகழ்வில் பயனாளிகள் தமது வாழ்வாதாரத்துக்கான தொழில் முயற்சிகளை மிகவும் நம்பிக்கையுடன் தொடர்வதாகக் கூறி வடக்கு மாகாண சபைக்குத் தங்களது நன்றிகளையும்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி மகளிர் விவகார அமைச்சினால் வழங்கி வைப்பு! Read More »

வடமாகாண தேசிய தைப்பொங்கல் விழா ஆளுநர் தலைமையில் பூநகரி ஜெயபுரம் பகுதியில் நடைபெற்றது

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாணத் தைப்பொங்கல் விழா தமிழர் மரபுகளின் படி வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (16.01.2024) நடைபெற்றது. கலாசார முறைப்படி வடமாகாண ஆளுநர் தலைமையில் பூநகரி ஜெயபுரம் நெல் வயலில் நெல் அறுவடையும் அதன் பின்னர் அதனை சூரியபகவானுக்கு அர்ப்பணிக்கும் பொங்கல் பொங்கும் நிகழ்வு ஜெயபுரம் அம்மன் ஆலயத்திலும் நடைபெற்றது. இதன் பின்னர் கலாசார கூறுகளுடன் கூடிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஆளுநர்

வடமாகாண தேசிய தைப்பொங்கல் விழா ஆளுநர் தலைமையில் பூநகரி ஜெயபுரம் பகுதியில் நடைபெற்றது Read More »

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றனர். நடன நிகழ்வுகளும் பொங்கல் விழாவை மெருகூட்டின.  

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் Read More »

நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியமானதாகும். – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் (IMF) தெரிவிப்பு

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  குழு இன்று(14.01.2024) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு, வர்த்தகப் பிரதிநிதிகள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பிரதிநிதிகள் என பலரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர். சர்வதேச நாணய நிதியத்தை (IMF) பிரதிநிதித்துவப்படுத்தி, சிரேஷ்ட பிரதம அதிகாரி தலைமையில் நிரந்தர வதிவிட பிரதிநிதி, சிரேஷ்ட பொருளியலாளர், சிரேஷ்ட

நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியமானதாகும். – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் (IMF) தெரிவிப்பு Read More »