November 22, 2023

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்களின் இரங்கல் செய்தி

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் பாசமிகு தாயார் திருமதி.மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் 21.11.2023 அன்று தனது 93வது வயதில் கொழும்பில் இயற்கை எய்தினார். அன்னாரது மறைவையொற்றி வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறைவேற்று அதிகாரிகள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சார்பில் எமது ஆழ்ந்த இதயபூர்வமான அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம். மேலும் அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். பிரதம […]

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்களின் இரங்கல் செய்தி Read More »

வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – எரிக் சொல்ஹெய்ம், வட மாகாண ஆளுநரிடம் உறுதி

வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. வட மாகாணத்தின் இடர்முகாமைத்துவம், மக்களின் அன்றாட வாழ்வியல் நிலை, காலநிலை, பொருளாதாரம், மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரால் இதன்போது சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. விடயங்களை கேட்டறிந்துக்கொண்ட ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம்,

வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – எரிக் சொல்ஹெய்ம், வட மாகாண ஆளுநரிடம் உறுதி Read More »