October 2022

2022ம் ஆண்டின் இரண்டாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 19.10.2022

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2022ம் ஆண்டின் இரண்டாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 19.10.2022 ஆம் திகதி காலை 10 மணிக்கு A9 வீதி, கைதடி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண மாவட்ட செயலாளர்களின் […]

2022ம் ஆண்டின் இரண்டாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 19.10.2022 Read More »

வட மாகாண கல்வி அமைச்சின் நவராத்திரி விழா– 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி அமைச்சின் நலன்புரிச்சங்கம், கல்வித் திணைக்களத்தின் நலன்புரிச்சங்கம் மற்றும் யாழ் வலயக் கல்வி அலுவலக நலன்புரிச்சங்கம் என்பவற்றுடன் இணைந்து நடாத்திய வட மாகாண நவராத்திரி விழா 2022.10.05 (புதன்கிழமை) காலை 7.30 மணியளவில் கல்வி அமைச்சு வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சிலை முன்றலில் நடைபெற்றது. ஆலய வழிபாட்டோடு நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து யாழ். வலயக்கல்வி பணிப்பாளர் திரு.மு.ராதாகிரு~;ணன் அவர்களால்

வட மாகாண கல்வி அமைச்சின் நவராத்திரி விழா– 2022 Read More »

தியானப்பயிற்சி அறிவுப்பகிர்வு நிகழ்வு – சுதேச மருத்துவத் திணைக்களம், வடக்கு மாகாணம்

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தொடர் அறிவுப் பகிர்வு நிகழ்வின் முதற்கட்டமாக தியானப்பயிற்சியானது கடந்த 11.10.2022 ம் திகதி திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியானது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவின் சமூக மருத்துவர் அவர்களினால் செய்முறை விளக்கங்களுடன் ஏறத்தாழ 30 உத்தியோகத்தர்களின் முனைப்பான பங்களிப்புடன் நடாத்தப்பட்டது.

தியானப்பயிற்சி அறிவுப்பகிர்வு நிகழ்வு – சுதேச மருத்துவத் திணைக்களம், வடக்கு மாகாணம் Read More »

யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகத்தின் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு – 2021

வடமாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக, யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாண வலயத்துக்குரிய மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 10.10.2022 அன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களும் ஏனைய அதிதிகளாக யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப்

யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகத்தின் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு – 2021 Read More »

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழா மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் வைபவம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழாவும் மற்றும் றோட்டறிக் கழகத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்ட சத்திர சிகிச்சை கூடத்துக்கான மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் 10.10.2022 அன்று திங்கட்கிழமை ஆதார வைத்தியசாலை வைத்தியர் அத்தியட்சகர் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.பந்துலசேன அவர்களும் ஏனைய அதிதிகளாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், தென்மராட்சி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழா மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் வைபவம் Read More »

வயல் நிலங்களின் விளைச்சலை அதிகரிக்க அசோலா செய்கை

வயல் நிலங்களின் விளைச்சலை அதிகரிக்க அசோலா செய்கை விவசாயத் திணைக்களம், வடக்கு மாகாணம்

வயல் நிலங்களின் விளைச்சலை அதிகரிக்க அசோலா செய்கை Read More »

மருத்துவமுகாம் சுதந்திரபுரம் – உடையார்கட்டு

விவசாய திணைக்களத்தினால் கடந்த 06.10.2022 அன்று சுதந்திரபுரம் – உடையார்கட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையில் விசுவமடு சித்த மத்திய மருந்தகமானது மருத்துவ முகாம் ஒன்றினை நடாத்தியது. முல்லைத்தீவு மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்களினால் நடாத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் ஏறத்தாழ 100 விவசாயிகள் பயன்பெற்றனர்.

மருத்துவமுகாம் சுதந்திரபுரம் – உடையார்கட்டு Read More »

மருத்துவர்களிற்கான ‘அக்கினிகர்ம’ பயிற்சி

சித்த வைத்தியசாலைகளில் சித்த விசேட சிகிச்சையினை மேம்படுத்தும் முகமாக வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் மருத்துவர்களிற்கு ‘அக்கினிகர்ம’ பயிற்சியானது கடந்த 03.10.2022 ம் திகதி கீரிமலை சித்த மத்திய மருந்தகத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியில் 14 மருத்துவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  

மருத்துவர்களிற்கான ‘அக்கினிகர்ம’ பயிற்சி Read More »

சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவை

முல்லைத்தீவு மாவட்டத்தின் சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவையானது 28.09.2022 அன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நடமாடும் சேவையானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதல்களுடன், சம்பத்நுவர பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன்  தனித்துவமான 10 இடங்களில் இடம் பெற்றது. இந்நடமாடும் சேவையில் மக்களின் அடிப்படை வசதிகளுக்கான

சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவை Read More »