November 2019

வட மாகாண சர்வதேச கைத்தொழில் கண்காட்சியும் வர்த்தக மன்றமும் நிகழ்வு

வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டலில் தொழிற்துறைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான வெளிநாட்டு சந்தைவாய்ப்பு  தொடர்புகளை ஏற்படுத்தும் முகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சி கடந்த 31.10.2019 காலை 9.30 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது வட மாகண ஆளுநரின் செயலாளர் திரு.S. சத்தியசீலன்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான  மலேசியாவின் உயர்ஸ்தானிகர் Mr. Tan Yang Thai மலேசிய இலங்கை வர்த்தக சபைத் தலைவர் Dato. S.குலசேகரன், மகளிர் விவகார […]

வட மாகாண சர்வதேச கைத்தொழில் கண்காட்சியும் வர்த்தக மன்றமும் நிகழ்வு Read More »

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் – பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையினைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் சந்திப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையினைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் சிலரை கடந்த வரம் (ஒக்.31) லண்டனில் சந்தித்து கலந்துரையாடினார். வடமாகாணத்தில் முதலாவது தமிழ் ஆளுநராக, வடமாகாணத்தை அபிவிருத்தி பாதைக்கு முன் கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் , கட்டமைப்பு மாற்றங்கள் குறித்தும் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்த ஆளுநர் அவர்கள் , வடமாகாணத்தை மேலும் அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு அவர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இதன்போது தெரிவித்தார்.

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் – பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையினைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் சந்திப்பு Read More »

வடமாகாணத்தில்அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் பணிப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக வடமாகாணத்தில் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆளுநரின் செயலாளர் தலைமையிலான விசேட கலந்துரையாடல் 05 நவம்பர் 2019 அன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது வடமாகாண சுகாதார சுதேச வைத்திய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் பதில் செயலாளர் கே.தெய்வேந்திரம் , வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் , மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிராந்திய

வடமாகாணத்தில்அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் பணிப்பு Read More »

மலேசியாவிடமிருந்து நாம் விவசாயம் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் – ஆளுநர்

விவசாயத்தில் வளர்ச்சியடைந்துள்ள மலேசியாவிடமிருந்து நாம் விவசாயம் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாண சர்வதேச கைத்தொழில்துறை கண்காட்சியும் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலும் நிகழ்வு 31 ஒக்ரோபர 2019 அன்று யாழ் வீரசிங்கம் மண்டபம் மற்றும் யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ் பொதுநூல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் அவர்கள் டிஜிட்டல் தொடர்பாடல் ஊடாக கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு ஆளுநர் அவர்கள்

மலேசியாவிடமிருந்து நாம் விவசாயம் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் – ஆளுநர் Read More »

ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ஆளுநர் விஜயம்

லண்டன் ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 31 ஒக்ரோபர் 2019 அன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டார். ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்கள் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களை சந்தித்தார். ஆலயத்தின் நிர்வாக சபையினர் இலங்கையின் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் அதற்கு ஆளுநர் அவர்கள் உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.

ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »