October 2019

வடக்கின் தங்க குரல் தேடல் நிகழ்வு கௌரவ ஆளுநர் தலைமையில் ஆரம்பம்

வடக்கு இசை ஆர்வலர்களை ஊக்குவிக்கும் முகமாக வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் வடக்கின் தங்க குரல் 2019 இற்கான முதற்கட்ட குரல் தேர்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் 05 ஒக்ரோபர் 2019 அன்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இந்த குரல் தேடல் நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் […]

வடக்கின் தங்க குரல் தேடல் நிகழ்வு கௌரவ ஆளுநர் தலைமையில் ஆரம்பம் Read More »

மாபெரும் ஆளுநர் வெற்றிக்கிண்ண நிகழ்வு ஆளுநர் தலைமையில் ஆரம்பம்

இறைவன் எனக்கு கொடுத்த சிறிய காலத்தில் உங்கள் சேவகனாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அனேக செயற்திட்டங்களை மேற்கொண்டும் இளைஞர்களுக்காக எதுவும் செய்யவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் இருந்தது அதனை நிவர்த்தி செய்யும் முகமாக இளைஞர்களுக்கான ஆரம்ப படியாக இந்த விளையாட்டு முயற்சி அமைந்துள்ளது என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவில் மாபெரும் ஆளுநர் வெற்றிக்கிண்ண நிகழ்வு கௌரவ ஆளுநர் தலைமையில் 05 ஒக்ரோபர் 2019 அன்று ஆரம்பமானபோதே

மாபெரும் ஆளுநர் வெற்றிக்கிண்ண நிகழ்வு ஆளுநர் தலைமையில் ஆரம்பம் Read More »

வவுனியா கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளன அலுவலகம் ஆளுநரினால் திறப்பு

வவுனியா மாவட்டம் புகையிரத நிலைய வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளன அலுவலகம் ஆளுநர் அவர்களினால் 06 ஒக்ரோபர் 2019 அன்று திறந்தவைக்கப்பட்டது.

வவுனியா கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளன அலுவலகம் ஆளுநரினால் திறப்பு Read More »

விதை விதைக்கும் விழா என்பது நம் நாகரீகத்தின் முதுகெலும்பாகும் – ஆளுநர்

போர் கண்ட தேசத்தில் திரும்பவும் தேர் ஓடவேண்டும் என்றால் அந்த போருக்கும் தேருக்கும் இடையிலே இருக்கின்ற ஏரோடவேண்டும். வான் மழையை அறுவடைசெய்து அங்கே குளம் கட்டி குலதெய்வம் வைக்கும் நாகரீகம் வளர்த்தவர்கள் நம் தமிழர்கள் . அந்த நாகரீகம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும அப்பாற்பட்டதென்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே விதை விதைக்கும் விழா என்பது நம் நாகரீகத்தின் முதுகெலும்பாக இருக்கின்றது என்று என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஓமந்தை ஆழப்படுத்திய அலைகல்லுப்போட்ட குளத்தினை கையளிக்கும்

விதை விதைக்கும் விழா என்பது நம் நாகரீகத்தின் முதுகெலும்பாகும் – ஆளுநர் Read More »

வட மாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு’ ஆளுநர் தலைமையில் ஆரம்ப நிகழ்வு

வடமாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு என்ற கருப்பொருளிலான உறுதி மொழி எடுக்கும் வீதிபாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் 07 ஒக்ரோபர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் , அரச அலுவலகங்கள் , அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஆகியவற்றின் பிரதானிகளின் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. அத்துடன் வீதிப்பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் அரசாங்க அதிபர்கள் தலைமையில் 07 ஒக்ரோபர்

வட மாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு’ ஆளுநர் தலைமையில் ஆரம்ப நிகழ்வு Read More »

முதன்முறையாக வடமாகாணத்தில் அரச அலுவலக சாரதிகளின் உடற்தகுதிக்கான இலவச மருத்துவ பரிசோதனை – ஆளுநர்

வடமாகாண வீதி பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு முதன்முறையாக வடமாகாணத்திலுள்ள அரச அலுவலகங்களை சேர்ந்த சாரதிகளின் உடற்தகுதிக்கான இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் தொடர்பிலான கூட்டம் 04 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆளுநர் அவர்கள் குறிப்பிடுகையில் , இந்த நிகழ்வின் முதற்கட்டமாக வீதி

முதன்முறையாக வடமாகாணத்தில் அரச அலுவலக சாரதிகளின் உடற்தகுதிக்கான இலவச மருத்துவ பரிசோதனை – ஆளுநர் Read More »

நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது – ஆளுநர்

ஒரு சமுதாயம் முன்னேறவேண்டும் எனில் அந்த சமுயதாயத்தின் அடிப்படை நியாயமானதும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்ற பாரிய கொள்கை இருக்கவேண்டும் . நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். கார்கில்ஸ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் பிள்ளைகளுக்கான கார்கில்ஸ் சாரு பிமா உழவர் சமூக நன்மை மற்றும் உதவித்தொகை வழங்கும் 2018 -2019 நிகழ்வு 04 ஒக்ரோபர் 2019 அன்று யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கில் இடம்பெற்றறது.

நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது – ஆளுநர் Read More »

நாயாறு , நந்திக்கடல் பொதுமக்களின் காணிகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

நாயாறு களப்பு மற்றும் நந்திக்கடல் களப்பு பகுதியில் வர்த்தமானி அறிவித்தலின் படி காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதினால் பாதிப்படைந்த பொதுமக்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கு வழங்கிய முறைப்பாட்டினை தொடர்ந்து கௌரவ ஆளுநர் அவர்கள் இது தொடர்பில் ஆராயும் கூட்டம் 03 ஒக்ரோபர் 2019 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. 2017ஆம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நாயாறு மற்றும் நந்திக்கடல் பகுதியினை வர்த்தமானி அறிவத்தல் மூலம் தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவதந்தனர். ஆனாலும்

நாயாறு , நந்திக்கடல் பொதுமக்களின் காணிகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் Read More »

“கபிலநிறத் தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைத் துண்டத்தின் வயல்விழா”

கபிலநிறத் தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைத் துண்டத்தின் வயல்விழா 02.10.2019 ஆம் திகதி அன்று உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பண்ணை முகாமையாளர்; க.மதனராஜ் குலாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுகூறு அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். இவ் வயல் விழாவில் வலய உதவிப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், உதவிப் பண்ணை முகாமையாளர், விவசாயப் போதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,

“கபிலநிறத் தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைத் துண்டத்தின் வயல்விழா” Read More »

பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா

ஓமந்தையிலுள்ள காயாங்குளம் எனும் இடத்தில் பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா 01.10.2019 ஆம் திகதியன்று நடாத்தப்பட்டது. வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் சிறிய வெங்காயச் செய்கை பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டாலும், பெரிய வெங்காயச் செய்கையானது ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்தளவிலான விஷ்தீரணத்திலேயே மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. எனவே பெரிய வெங்காயச் செய்கைத் தொழில்நுட்பத்தை விவசாயிகள் மத்தியில் விரிவுபடுத்தும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தன் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பெரியவெங்காயவிதை வழங்கப்பட்டு, விவசாயப் போதனாசிரியர்களின் ஆலோசனைகளின் கீழ் பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது

பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா Read More »