October 2019

பயிர்ச்சிகிச்சை முகாம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு விசேட பயிர்ச்சிகிச்சை முகாமொன்று வவுனியா சந்தை வட்டாரத்தில் கடந்த 11.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. இச் சந்தை வட்டார பயிர்ச் சிகிச்சை நிகழ்ச்சித் திட்டமானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 4.30 மணி முதல் காலை 7.30 மணி வரை குறித்த இடத்தில் நடாத்தப்பட்டுவருகிறது. இதன்போது பயிர்ச்செய்கையாளர்கள் தாவர வைத்தியர்களுடன் தாம் பயிர்ச்செய்கையில் எதிர்கொள்ளும் நோய், பீடைத் தாக்கங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு உரிய தீர்வுகளைப் பெற்றுச் செல்கின்றனர்.

பயிர்ச்சிகிச்சை முகாம் Read More »

எமது சமுதாயத்தின் சில அத்திவாரங்கள் போரினால் தகர்க்கப்பட்டுள்ளன – ஆளுநர்

போர் எங்களை தாக்கியது மட்டுமல்லாது எமது சமுதாயத்தின் சில அத்திவாரங்கள் போரினால் தகர்க்கப்பட்டுள்ளன. எனவே அதனை நாம் செம்மைப்படுத்தவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் NVQ மட்டத்தினை பூர்த்தி செய்த 245 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு    

எமது சமுதாயத்தின் சில அத்திவாரங்கள் போரினால் தகர்க்கப்பட்டுள்ளன – ஆளுநர் Read More »

வடமேல் மாகாண ஆளுநர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டார அவர்கள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை சம்பிரதாயபூர்வமாக 11 ஒக்ரோபர் 2019 அன்று ஆளுநர் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

வடமேல் மாகாண ஆளுநர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு Read More »

வடமாகாண வீதிப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி ஆளுநர் தலைமையில் நடைபெற்றது

ஒரு சமூகத்தின் அலங்காரத்தை காணும் இடம்தான் திறந்த வெளி. திறந்த வெளியை காணும் முக்கிய இடமாக இப்போது சாலையும் வீதியும் காணப்படுகின்றது என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஆளுநர் அவர்களின் வழிநடத்தலில் ஆளுநர் செயலகம், வீதி பாதுகாப்பு சபை மற்றும் வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியன இணைந்து நடாத்தும் இவ்வீதிபாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வீதி பாதுகாப்பு சபையின் பிரதானி தலைமையில் 11 ஒக்ரோபர் 2019 அன்று காலை 9.00 மணிக்கு வடமாகாண

வடமாகாண வீதிப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி ஆளுநர் தலைமையில் நடைபெற்றது Read More »

ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலில் ஹய்ரெக் லங்காவின் தேசிய தொழில் தகமை தொழிற்பயிற்சி கருத்தரங்கு

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக வடமாகாணத்திலுள்ள வேலையற்ற இளைஞர்களை தேசிய ஊழியர் படையணியில் இணைத்துக்கொள்வதற்கும், தொழிற்தகுதி மற்றும் தொழில்விருத்தி செயற்திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்தகுதிச்சான்றிதழ்களை வழங்குவதற்கான குறுங்காலத் தொழிற்பயிற்சி தொடர்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இம்மாதம் நடைபெறவுள்ளது. ஆளுநர் செயலகம் , மாவட்டச் செயலகம் மற்றும் ஹய்ரெக் லங்கா நிறுவனம் ஆகியன இணைந்து வடமாகாணத்தை சேர்ந்த 5 மாவட்ட செயலகங்களிலும் நடாத்தவுள்ள இந்த கருத்தரங்கில் மின் இணைப்பாளர் , கனரகவாகன இயக்குனர், கட்டுமானப்பணியாளர், வாகனம்திருத்துநர்,

ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலில் ஹய்ரெக் லங்காவின் தேசிய தொழில் தகமை தொழிற்பயிற்சி கருத்தரங்கு Read More »

ஆளுநர் தலைமையில் நாளை வடமாகாண வீதிபாதுகாப்பு வார நடைபவனி

வட மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதிப்பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (11 ஒக்ரோபர் 2019) காலை 9.00 மணிக்கு ஆளுநர் செயலகத்திலிருந்து யாழ் துரையப்பா விளையாட்டு மைதானம் வரையில் நடைபவனி இடம்பெறவுள்ளது. ஆளுநர் செயலகம், வீதி பாதுகாப்பு சபை மற்றும் வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியன இணைந்து நடாத்தும் இந்த வீதிபாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வட மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் நாளை காலை

ஆளுநர் தலைமையில் நாளை வடமாகாண வீதிபாதுகாப்பு வார நடைபவனி Read More »

இந்த சமுதாயத்தின் நாளைய சிறந்த குடிமக்களாக நீங்கள் வரவேண்டும் என்பதே எனது விருப்பம் – ஆளுநர்

‘இந்த சமுதாயத்தின் நாளைய சிறந்த குடிமக்களாக நீங்கள் வரவேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்று திருநெல்வேலி சைவ சிறுவர் அபிவிருத்தி நிலையச் சிறார்கள் இல்லத்தில் 08.10.2019 அன்று இடம்பெற்ற வாணி விழா நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். இந்த நிகழ்வில் இல்லச் சிறுவர்களுடன் ஆளுநர் அவர்கள் டிஜிட்டல் தொடர்பாடல் மூலம் உரையாடியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் ஆளுநர் அவர்களின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்கள் முதன்மை விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன்

இந்த சமுதாயத்தின் நாளைய சிறந்த குடிமக்களாக நீங்கள் வரவேண்டும் என்பதே எனது விருப்பம் – ஆளுநர் Read More »

முதியவர்கள் நம் சமுதாயத்தின் மூத்த ஆலோசகர்கள் – ஆளுநர்

முதியவர்கள் நம் சமுதாயத்தின் மூத்தஆலோசகர்கள் . அவர்கள் உலகத்தை தொடுவதற்கான இன்றைய புதிய தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். கைதடி முதியோர் இல்லத்தில் 07 ஒக்ரோபர் 2019 அன்று நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்களினால் 04 முதியவர்களுக்கான முதுசம் விருது, மாவட்ட ரீதியாக 04 சமூகசேவையாளர் விருதும் வழங்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டன.

முதியவர்கள் நம் சமுதாயத்தின் மூத்த ஆலோசகர்கள் – ஆளுநர் Read More »

ஆளுநர் தலைமையில் வீதிபாதுகாப்பு வாரம் இன்று ஆரம்பம்

ஜனநாயகம் வளரவேண்டும் எனில் உண்மையான நீதியும் நியாயமும் இருத்தல் நன்று. நீதியும் நியாயமும் அல்லாத ஒரு சமுதாயத்தில் ஜனநாயகத்தை கேட்பது வேரில்லாத மரத்தில் கனிகேட்பது போன்றதாகும். என்று ஆளுநர் அவர்கள் தெரிவித்தார். வீதிபாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் இன்று (07) காலை ஆளுநர் செயலகத்தில் ஆரம்பமானது . இதன்போது ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆளுநரின் செயலாளர் , அரச அதிகாரிகள் மற்றும் வடமாகாண வீதி பயணிகள்

ஆளுநர் தலைமையில் வீதிபாதுகாப்பு வாரம் இன்று ஆரம்பம் Read More »

வடமராட்சி வான்கதவுகள் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பகுதிக்கு ஆளுநர் விஜயம்

வடமராட்சி மீனவர்களது 8 வான்கதவுகளின் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பருத்தித்துறை பகுதிக்கு 05 ஒக்ரோபர் 2019 அன்று பிற்பகல் ஆளுநர் அவர்கள் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டு அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அப்பகுதி மீனவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார். இதன்போது பருத்தித்துறை முனைப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்கள், வடமராட்சி கடற்றொழில் சமாசத்தின் தலைவர், மீன்படி சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அப் பகுதியில் வாழும் மீனவர்களுடன் கலந்துரையாடினார். 16 வான்கதவுகள் சீரமைப்பதற்காக கௌரவ ஆளுநர் அவர்களிடம் வடமராட்சி

வடமராட்சி வான்கதவுகள் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பகுதிக்கு ஆளுநர் விஜயம் Read More »