September 2019

யாழில் அரச புகைப்படக்கண்காட்சி ஆளுநர் தலைமையில் ஆரம்பம் 

திரும்பவும் இந்த தேசத்தை கட்டி எழுப்பும் போது அரசியல் மட்டுமன்றி மனிதநேயத்தைடனும் கட்டி எழுப்பவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்அவர்கள் தெரிவித்தார் . அரச புகைப்பட ஆலோசனைக்குழு , வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சு ,இலங்கைக்கலைக் கழகம் , கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலான அரச புகைப்பட கண்காட்சியை கௌரவ ஆளுநர் அவர்கள் யாழ் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் 20 செப்ரெம்பர் 2019 அன்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் […]

யாழில் அரச புகைப்படக்கண்காட்சி ஆளுநர் தலைமையில் ஆரம்பம்  Read More »

வடமாகாண ஆளுநருக்கும் இராணுவதளபதிக்குமிடையில் சந்திப்பு

23ஆவது இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (20) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி அவர்கள் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு இதன்போது விளக்கமளித்ததுடன் தனது தலைமைத்துவத்தின் கீழ் அதனை தொடந்தும் முன்னெடுத்து செல்வேன் என்றும் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனவரி 8 அதிமேதகு ஜனாதிபதி

வடமாகாண ஆளுநருக்கும் இராணுவதளபதிக்குமிடையில் சந்திப்பு Read More »

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி தொடர்பில் கலந்துரையாடல்

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவில் நடைபெறவுள்ள மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டியில் ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் மற்றும் பெண்களுக்கான வலைப்பாந்தாட்ட போட்டிகள் தொடர்பிலான கலந்துரையாடல் 19 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போது ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டியில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டதுடன் இதற்கான போட்டிகள் மிகவிரைவில் ஆரம்பமாகவுள்ளதுடன் இப்போட்டியில் பங்குபற்றும் கழகங்களுக்கான பரிசுத்தொகையை ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் விளையாட்டு திணைக்களத்துடன் இணைந்து வடமாகாண

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி தொடர்பில் கலந்துரையாடல் Read More »

சிற்றூர்தி உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

வடமாகாணத்தில் உள்ள சிற்றூர்திகளின் உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் முகம்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஆலோசனைக்கமைய ஆளுநரின் செயலாளர் , வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மற்றும் வடமாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 19 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது யாழ் மாவட்டத்தில் சிற்றூர்தியின் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் பயணிகள் முகம்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது சிற்றூர்தி பயணத்தின்போது

சிற்றூர்தி உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் கலந்துரையாடல் Read More »

வவுனியாவில் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கனகராயன்குளம் கரப்புக்குத்தி வீதிப்பாலமானது வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வவுனியா வடக்கு பிரதேசசiபின் தவிசாளர் ச.தணிகாசலம் அவர்களால் 18 செப்ரெம்பர் 2019 அன்று வைபவரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

வவுனியாவில் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது Read More »

மறவன்புலவு பிரதேச மக்கள் பிரதிநிதிகள் – ஆளுநர் சந்திப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் மறவன்புலவு பிரதேச மக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சின் செயலகத்தில் இன்று (18) இடம்பெற்றது. மறவன்புலவு மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்காற்றாலைக்கு எதிராக மறவன்புலவு மக்களால் இன்று முதலமைச்சு செயலகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தையடுத்து கௌரவ ஆளுநர் அவர்கள் பிரதேச மக்களின் பிரதிநிதிகள் ஐவர் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச

மறவன்புலவு பிரதேச மக்கள் பிரதிநிதிகள் – ஆளுநர் சந்திப்பு Read More »

வடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

வடமாகாணத்தில் உள்ள 15 குளங்கள் புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் 3 குளங்களாக மொத்தம் 15 குளங்கள் புனரமைக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இக் குளங்களின் புனரமைப்பிற்கு தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள் , மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் முதற்கட்டமாக 11.65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு Read More »

சாட்டி பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்

சாட்டி பிரதேசத்திற்கு இன்று காலை (18)விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் முருங்கை பயிர்ச்செய்கையை தனது காணியில் மேற்கொள்ளும் சசிகரன் என்பவருடன் சுமூகமாக கலந்துரையாடினார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

சாட்டி பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »

சாட்டி கடற்கரைக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் சாட்டி கடற்கரைக்கு இன்று (18) காலை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். பொதுமக்கள் அதிகளவில் வருகை தரும் சுற்றுலாப்பகுதியான சாட்டி கடற்கரையினை சுத்தமாக பேணுமாறும் இப்பகுதியில் காணப்படும் பொதுமலசலகூடங்கள் பொதுமக்கள் பாவனைக்கு உகந்தவகையில் மாற்றியமைக்குமாறும் வேலணைப் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கும் ஆளுநர் அவர்கள் பணிப்புரை வழங்கினார். -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

சாட்டி கடற்கரைக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம் Read More »

வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் அக்டோபர் 7 இல் ஆரம்பம்

வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் எதிர்வரும் அக்டோபர் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாண சாலை பாதுகாப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்றது. அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக வீதி பாதுகாப்பு வாரத்தின் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வடமாகாணம் முழுவதும்

வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் அக்டோபர் 7 இல் ஆரம்பம் Read More »