September 2019

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலக பிரிவு

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் குருநகர் மேற்கு பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களை அங்கத்தவர்களாகக் கொண்டு சிரட்டைசார் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்திகளைச் செய்யும் ‘குருநகர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்’, குருநகர் மேற்கு அவர்களுக்கு அவர்களின் உற்பத்தியினை மேலும் விருத்தி செய்வதற்கென (மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.99,111.50 பெறுமதியான இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் அமைச்சு அலுவலகத்தில் 2019/09/24 ஆம் திகதி சங்க உறுப்பினர்களிடம் […]

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலக பிரிவு Read More »

யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்கள் , மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது நேற்று (24) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை, புறாப்பொறுக்கி, குஞ்சர்கடை, நாவலர்மடம், நெல்லியடி போன்ற பகுதிகளில் இடம்பெற்றதுடன் இந்த கண்காணிப்பு விஜயமானது ஒரு உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. இதன்போது பல

யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்கள் , மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை Read More »

யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் – ஆளுநர் சந்திப்பு

யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 24 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்மாவட்டத்தில் துடுப்பாட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும் , யாழில் ஓர் கிரிக்கட் அக்கடமியை ஸ்தாபிப்பதுடன் கிரிக்கட் விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைப்பதில் உள்ள சிக்கல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் , ஆளுநர் அவர்களிடம் இதற்கான சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர். மேலும் வடமாகாணத்தின் விளையாட்டுத்திணைக்களத்தின் கீழ் கடினப்பந்தை இணைத்துக்கொண்டு வட மாகாண சபையின் ஊடாக

யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் – ஆளுநர் சந்திப்பு Read More »

வட மாகாண வலய கல்விப்பணிப்பாளர்கள் – ஆளுநர் கலந்துரையாடல்

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் வடமாகாண வலய கல்விப்பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 24 செப்ரெம்பர் 2019 அன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது காணொளி தொடர்பாடல் மூலம் ஆளுநர் அவர்கள் உரையாடுகையில், வடமாகாண பாடசாலைகளில் பாடசாலை அனுமதியின் போது நன்கொடைகள் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதுடன் அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படின் அதுதொடர்பிலான அனுமதி முன்னரே வடமாகாண கல்வி அமைச்சிடம் பெற்றுக்கொள்ளப்படவேண்டும். அத்துடன் வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் பாடசாலைகள் சுற்றறிக்கைகளுக்கமைவாக

வட மாகாண வலய கல்விப்பணிப்பாளர்கள் – ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடமாகாண சபையின் இணையத்தளத்தில் மின்காற்றாலை திட்டம் தொடர்பிலான அறிக்கை மக்களின் பார்வைக்காக பதிவேற்றப்படல் வேண்டும் – ஆளுநர்

வடமாகாணத்தில் உள்வாங்கப்படும் மின்காற்றாலை திட்டம் தொடர்பிலான சுற்றுச்சூழல் சமுதாய தாக்கங்கள் மற்றும் நன்மைகள் தொடர்பிலான அறிக்கை வடமாகாண சபையின் இணையத்தளத்தில் மக்களின் பார்வைக்காக பதிவேற்றப்படல் வேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் மறவன்புலவு பிரதேச மக்களின் பிரதிநிதிகள் , இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் , நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 24 செப்ரெம்பர் 2019 அன்று இடம்பெற்றது.

வடமாகாண சபையின் இணையத்தளத்தில் மின்காற்றாலை திட்டம் தொடர்பிலான அறிக்கை மக்களின் பார்வைக்காக பதிவேற்றப்படல் வேண்டும் – ஆளுநர் Read More »

வடமாகாண பாடசாலைகளில் உள்ள வகுப்பு பிரிவுகளில் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக்கொள்ளக்கூடாது – ஆளுநர்

வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியினை கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது பாடசாலைகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை அனுமதி தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதன்போது , பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது வகுப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட

வடமாகாண பாடசாலைகளில் உள்ள வகுப்பு பிரிவுகளில் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக்கொள்ளக்கூடாது – ஆளுநர் Read More »

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவு

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் தும்பளை மேற்கு மற்றும் வல்லிபுரம், புலோலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களை அங்கத்தவர்களாகக் கொண்டு பனைசார் பொருட்களின் உற்பத்தி மற்றும் பலகார வகைகளைச் செய்யும் ‘திருமால் மகளிர் செயற்பாட்டுக்குழு’, வல்லிபுரம், புலோலி அவர்களுக்கு ரூபா.178,591.50 பெறுமதியான இயந்திரங்கள், பாத்திரங்கள் மற்றும் தளபாடங்களும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களைச் செய்யும் ‘அபிராமி சமூகமட்ட மகளிர் அமைப்பு’, தும்பளை மேற்கு, பருத்தித்துறை அவர்களுக்கு

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவு Read More »

கேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கேப்பாபிலவு மக்கள் , முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக இராணுவ உயர்அதிகாரி மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 20 செப்ரெம்பர் 2019 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத கேப்பாபிலவு மக்களின் 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்கள் தங்களது காணிகளை அடையாளங்காண்பதற்காக இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். கேப்பாபிலவில் காணிகளை இனங்கண்டு அவை இராணுவத்திற்கு தேவையானதாக அமையின் அவற்றுக்கு இதே வளம் கொண்ட

கேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல் Read More »

ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்

ஆலங்குளம் பிரதேச மக்கள் , கிளிநொச்சி பாதுகாப்பு கட்டளை தலைமையக இராணுவ உயர்அதிகாரி மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 20 செப்ரெம்பர் 2019 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் 74 ஏக்கருக்கு சொந்தமான 16 பேர் தமது சொந்த காணிகளே தேவை என்றும் , 44.5 ஏக்கர் காணியின் 30 உரிமையாளர்கள் தமக்கு மாற்றுக்காணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல் Read More »