July 2019

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – ஆளுநர்

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தழிழ் மொழி வாழவேண்டும். நாங்கள் மொழி அடையாளம் கொண்டவர்கள் ஆகையினாலே பாரதி சொன்னது போல் ஏனைய மொழியை படியுங்கள் ஆனால் தமிழை தாயாக கொண்டிருங்களென ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கு அமையை தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் ‘தேசிய பால் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்’ வடமாகாண அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் இன்று […]

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – ஆளுநர் Read More »

“முன்னேற்ற ஆறுமுகம் திட்டம்” தொடர்பான விசேட கலந்துரையாடல்

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் குடிநீர் தேவையினை பூர்த்திசெய்யும் முகமாக முன் மொழியப்பட்டுள்ள “முன்னேற்ற ஆறுமுகம் திட்டம்” தொடர்பான விசேடகலந்துரையாடல் ஆளுநரின் தலைமையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு அனுரதிஸாநாயக்க அவர்களின் பங்குபற்றலுடன் நேற்று (22) பிற்பகல் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த திட்டத்தினை ஆரம்பிக்கும்போதும் அதற்கு முன்னருமான காலப்பகுதியில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள்திணைக்களம், சுற்றாடல்பாதுகாப்புஅதிகாரசபை,வனவளபாதுகாப்பு திணைக்களம் மற்றும் இத்திட்டத்துடன் தொடர்புடைய

“முன்னேற்ற ஆறுமுகம் திட்டம்” தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நேற்று (22) பிற்பகல் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. யாழ் குடாநாட்டில் வசிக்கும் சுமார் 630,000 மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்திசெய்யும் முகமாக பொறியியலாளர் குகனேஸ்வரராஜா அவர்களினால் முன்மொழியப்பட்ட இந்த திட்டம் அமைச்சரவை அங்கீகாரத்தினை பெற்றுள்ளதுடன் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அடுத்தமாதம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் – ஆளுநர் சந்திப்பு

  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் திரு ஜோசப் ஸ்ராலின் அவர்களுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 22 யூலை 2019 அன்று காலை கொழும்பில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் ஆசிரியர்களின் இடமாற்றங்களின்போது ஏற்படும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அதிபர் சேவைத் தரம் III இல் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆராயும் பொருட்டு கல்வியமைச்சின் செயலாளரின் தலைமையில் மாகாணப் பணிப்பாளர் மற்றும்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் – ஆளுநர் சந்திப்பு Read More »

வடமாகாண சுகாதார அமைச்சுக்கு பாராளுமன்ற அரச கணக்கு நிதிக் கோட்பாடுகள் வினைத்திறன்மிக்கதாக செயற்பட்டமைக்கான தங்கப்பதக்கம்

பாராளுமன்ற அரச கணக்கு குழுவினால் 2017ம் ஆண்டுக்காக நடாத்தப்பட்ட அரச அலுவலகங்கள், நிதிக் கோட்பாடுகளுக்கு இணங்குதலுக்கான மதிப்பீட்டு செயற்பாட்டில் வினைத்திறனாக செயற்பட்டமைக்காக வடமாகாணத்தின் சுகாதார அமைச்சுக்கு தங்க விருது வழங்கப்பட்டது. இன் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கடந்த 05.07.2019; திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் வடமாகாணத்தின் சுகாதார அமைச்சுக்குகான விருது பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஜெயசூரிய அவர்களினால் வடமாகாணத்தின் சுகாதார அமைச்சின் செயலாளர் திரு சி. திருவாகரன்

வடமாகாண சுகாதார அமைச்சுக்கு பாராளுமன்ற அரச கணக்கு நிதிக் கோட்பாடுகள் வினைத்திறன்மிக்கதாக செயற்பட்டமைக்கான தங்கப்பதக்கம் Read More »

மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் நடைபெற்றது – 2019

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2019ம் ஆண்டின் 2ம் காலாண்டுக்கான மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 18 யூலை 2019 ஆம் திகதி பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் திரு.அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் வடக்கு மாகாண மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் நடைபெற்றது – 2019 Read More »

அபிவிருத்தி உத்தியோகத்தர் – பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

வடக்குமாகாணத்தில் காணப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் – பயிலுநர் (77), கலாசார உத்தியோகத்தர் (03), பட்டதாரி ஆசிரியர் தகவல் தொழிநுட்பவியல் பாடம் (09) ஆகிய ஆளணிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் வைபவம் 17 யூலை 2019 அன்று மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் – பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன Read More »

ஆளுநர் தலைமையில் ‘வடக்கு வட்ட மேசை’ கலந்துரையாடல்

‘வடக்கு வட்ட மேசை’ கலந்துரையாடலின் (‘Northern Province Round Table’) இரண்டாவது கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (18) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர்

ஆளுநர் தலைமையில் ‘வடக்கு வட்ட மேசை’ கலந்துரையாடல் Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றது.

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ‘ஆளுநரின் பொதுமக்கள் தினம்’ இன்று (17) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றது. Read More »

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

 இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை நேற்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் வடமாகாணத்தின் நீர் பிரச்சனை, அதனை தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள ‘வடமராட்சி களப்பு’ திட்டம் உள்ளிட்ட செயற்திட்டங்கள் குறித்தும் விரிவாக இதன்போது கலந்துரையாடப்பட்டன. இதேவேளை இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு உள்நுழைய முயற்சிப்பது குறித்து கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர்

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »