April 2019

யாழ் முஹிய்தீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு ஆளுநர் விஜயம்

யாழ் பெரியகடை பகுதியில் அமைந்துள்ள முஹிய்தீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 29 ஏப்பிரல் 2019 அன்று இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த  ஆளுநர் அவர்களை பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌழவி ஏ.எம். றலீம் அவர்கள் வரவேற்றார். இதன்போது அங்கிருந்த முஸ்லிம் சமூகத்துடன் சுமூகமான கலந்துரையாடலில் ஆளுநர் அவர்கள் ஈடுபட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். மேலும் தற்போது இடம்பெற்றுவரும் பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகள் […]

யாழ் முஹிய்தீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு ஆளுநர் விஜயம் Read More »

யாழ் நாவாந்துறை மற்றும் ஐந்துசந்தி பகுதிகளுக்கு கௌரவ ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் ஐந்து சந்தி பகுதிகளுக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 29 ஏப்பிரல் 2019 அன்று முற்பகல் திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார். இதன்போது நாவாந்துறை பொதுச்சந்தைக்கு விஜயம் செய்த கௌரவ ஆளுநர் அவர்கள் அங்குள்ள வியாபாரிகளுடனும் பிரதேச மக்களுடன் சுமூகமான கலந்துரையாடலை மேற்கொண்டார். அத்துடன் ஐந்து சந்தி பகுதிக்கும் விஜயம் செய்த ஆளுநர் அவர்கள் அப்பகுதி மக்களுடன் சுமூகமான கலந்துரையாடலை மேற்கொண்டார். மேலும் குறித்த பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பு

யாழ் நாவாந்துறை மற்றும் ஐந்துசந்தி பகுதிகளுக்கு கௌரவ ஆளுநர் கண்காணிப்பு விஜயம் Read More »

ஆளுநர் பேராயருடன் சந்திப்பு

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (26) பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். கடந்த உயிர்த்த ஞாயிறு  மத வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்கள் முகம்கொடுக்க நேர்ந்த துன்பியல் நிகழ்வு குறித்து வடமாகாண மக்கள் சார்பில் தன்னுடைய ஆழ்ந்த கவலையை பேராயர் அவர்களிடம் தெரிவித்தார். வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு

ஆளுநர் பேராயருடன் சந்திப்பு Read More »

நீர் வெறுப்புநோய் பற்றிய விழிப்புணர்வு

நீர் வெறுப்புநோய் என்பது கொடிய உயிர் கொல்லிநோய் ஆகும். இது நாய்,பூனை மற்றும் காட்டுவிலங்குகளான குரங்கு, நரி, வெளவால், கீரி, ஓநாய் போன்ற விலங்குகளினால் ஏற்படுகின்றது. இதில் பெரும்பாலான நோய் தொற்றுநாய் கடிப்பதனாலேயே ஏற்படுகின்றது. இந்தநோயின் தாக்கம் கட்டாக்காலிதெருநாய்கள் அதிகளவில் காணப்படும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகின்றது. நோய் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய பின்னர் சிகிச்சை பெறுவது பயனளிக்காது உயிரிழப்புநிச்சயம் ஆதலால் வரமுன்னே காப்பது சிறந்தது. நாய்கடி அல்லது உமிழ்நீர் தொற்றுக்குள்ளானோர், நகக்;கீறல்கள் உடையோர் உடனடியாக

நீர் வெறுப்புநோய் பற்றிய விழிப்புணர்வு Read More »

ஆளுநரின் மக்கள் சந்திப்பு வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறாது

ஒவ்வொரு புதன்கிழமையும் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பு இவ்வாரம் புதன்கிழமையான நாளை மறுதினம் (24) இடம்பெறாது. வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு 2019.04.22

ஆளுநரின் மக்கள் சந்திப்பு வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறாது Read More »

யாழ் மறைமாவட்ட ஆயர் – ஆளுநர் சந்திப்பு

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று முற்பகல் (22) ஆயர் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நேற்றைய தினம் கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்த ஆளுநர் அவர்கள் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

யாழ் மறைமாவட்ட ஆயர் – ஆளுநர் சந்திப்பு Read More »

வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை – ஆளுநர் பணிப்புரை

வடமாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் நாளை(22) திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு 21.04.2019

வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை – ஆளுநர் பணிப்புரை Read More »

வெலிஓயா பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேசத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 18 ஏப்பிரல் 2019 அன்று விஜயம் மேற்கொண்டு அப்பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். வெலிஓயா பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் அவர்கள் பிரதேசத்தின் சயமந் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகள் பிரதேசத்தின் மக்களை சந்தித்து அப்பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைகள், அபிவிருத்தி திட்டங்கள், கல்வி, சுகாதார நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார். – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு –

வெலிஓயா பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »

வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு ஆளுநரின் தலைமையில் 19 ஏப்பிரல் 2019 அன்று பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழ் பண்ணை கடற்கரைப் பூங்கா பகுதியில் மரக்கன்று நாட்டும் செயற்திட்டம் ஆளுநரின் தலைமையில்  இடம்பெற்றது. வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி கே சிவஞானம், யாழ் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், யாழ் மாவட்ட செயலாளர் திரு.வேதநாயகன், யாழ் பிரதேச செயலாளர் திரு சுதர்சன் உள்ளிட்ட பலர்

வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன Read More »