March 22, 2019

ஆளுநரின் பொதுமக்கள் தினம் இம்முறை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது

ஆளுநரின் பொதுமக்கள் தினம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் புதன்கிழமை 27 மார்ச் 2019 அன்று நடைபெறவுள்ளது. வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த பொதுமக்கள் தினம் இடம்பெறவுள்ளது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் இம்முறை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது Read More »

பெறுகைகளுக்கான அறிவித்தல் – வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்

பெறுகைகளுக்கான அறிவித்தல் – வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் வடமாகாணத்தின் 9 பிரதேச வைத்தியசாலைகளுக்கான கணினி வலையமைப்பை வழங்குதல், பொருத்துதல், மற்றும் நிறுவுதலுக்கான பெறுகை – 2019 PDHS/NP/NET/2019

பெறுகைகளுக்கான அறிவித்தல் – வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் Read More »

நாற்று நடுகை கருவி மூலம் நடுகைசெய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா

விளைவு அதிகரிப்பை மேம்படுத்துவோம் எனும் நோக்கில் நாற்று நடுகை கருவி மூலம் நடுகை செய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா 20.3.2019 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் ஆள்காட்டிவெளி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் வண்ணாகுளம் மற்றும் குமனாயன்குளம் ஆகிய நெல் வயல்களில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுகூர் அவர்களின் ஏற்பாட்டில் ஆள்காட்டிவெளி விவசாயப் போதனாசிரியர் திருமதி.ளு.து.இமல்டா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும்,

நாற்று நடுகை கருவி மூலம் நடுகைசெய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா Read More »