March 18, 2019

அனுராதபுர மாவட்டத்திற்கான களவிஜயம் – பூச்சிகள் உட்புகா வலையினால் எல்லைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பினுள் சொட்டுநீர்ப்பாசனத்தின் கீழ் பயிர்ச்செய்கை

உலக வங்கியின் அனுசரணையுடன் அனுராதபுர மாவட்டத்தில் நச்சுவாடாகுளம் என்ற கிராமத்தில் அமுலாக்கப்படும் பூச்சிகள் உட்புகாத வலையினால் எல்லைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பினுள் சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கையினைப் பார்வையிடுவதற்கான வெளிக்களவிஜயம் ஒன்று 14.03.2019 ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டது. இக் களவிஜயமானது விவசாயத் துறையின் நவீன மயமாக்கல் திட்டத்தின் வடமாகாணத்திற்கான பிரதி மாகாண திட்டப்பணிப்பாளர் க.பத்மநாதன் மற்றும் விவசாய நிபுணர் விஜிதரன், யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. […]

அனுராதபுர மாவட்டத்திற்கான களவிஜயம் – பூச்சிகள் உட்புகா வலையினால் எல்லைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பினுள் சொட்டுநீர்ப்பாசனத்தின் கீழ் பயிர்ச்செய்கை Read More »

புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் “கொவிபொல” தொடர்பான பயிற்சிப் பட்டறை

புவிசார் இடம் அறியும் முறமையினைப் பயன்படுத்தி பயிர்உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் கொவிபொல தொடர்பான பயிற்சிப் பட்டறை கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 14.03.2019 ஆம் திகதி புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் (Global Positioning System) மற்றும் கொவிபொல (Govipola) தொடர்பான பயிற்சிப் பட்டறையானது மாகாண விவசாயத் திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாண விவசாயத் திணைக்களத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கு நடாத்தப்பட்டது. மேற்படி இரு பயிற்சிப்

புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் “கொவிபொல” தொடர்பான பயிற்சிப் பட்டறை Read More »

நாற்று நடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்ச் செய்கை சம்பந்தமான வயல்விழா

நாற்று நடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை சம்பந்தமான வயல்விழா 15 மார்ச் 2019 அன்று வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் பதில் உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி சூ.ஜெகதீஸ்வரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள், வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் இவ்வயல்விழாவில் பங்குபற்றியிருந்தனர். வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையின் பண்ணை முகாமையாளர் அவர்கள் நெற்பயிர்ச் செய்கையில்

நாற்று நடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்ச் செய்கை சம்பந்தமான வயல்விழா Read More »

வடமாகாணத்தின் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் நடவடிக்கை

வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தீர்மானித்துள்ளார். வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது பாடசாலைகளை  தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்ற நிலையிலேயே கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தினை எடுத்துள்ளார். ஏனைய எட்டு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகள் 2

வடமாகாணத்தின் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் நடவடிக்கை Read More »