கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் – கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழு கூட்டம்
கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 06 நவம்பர் 2020 அன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.
‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற அரசின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்திற்கு அமைச்சுகள்இ இ;ராஜாங்க அமைச்சுகள் உள்ளடங்கலாக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில்
1. சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு
2. வாழ்வாதார மேம்பாட்டு குழு
3. உள்நாட்டு உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான அபிவிருத்தி குழு
4. கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு என்பனவே அமைக்கப்பட்டன.
இதில் கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
நீர்ப்பாசனம் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோரை உள்ளடக்கி, சில இராஜாங்க அமைச்சர்களும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.
இதன் அடிப்படையில் கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக் குழுவின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்க வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலான தரவுகள் மாவட்டச் செயலாளர்களால் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. மேலும் நீர், மின்சாரம், வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகள் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்;பாகவும். கொவிட் 19 தொற்றிடர் நிலையில் இவற்றை முன்னெடுத்துச் செல்வதிலுள்ள தாமதங்கள் போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ இந்திக்க அனுரத்த, கௌரவ ஜீவன் தொண்டமான், கௌரவ ஜோன்சன் பெர்ணாண்டோ, கௌரவ துமிந்த திசநாயக்க, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கயன் இராமநாதன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், வடமாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் திருமதி.ச.மோகநாதன் கிளிநொச்சி மாவட்ட செயலாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்), யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் என பலதரப்பினரும் இதில் கலந்து கொண்டார்கள்.