விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பு கமத்தொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது. அதன்படி எதிர்வரும் 15.03.2025 ஆம் திகதி சனிக்கிழமை காலை 08.00 மணி முதல் 08.05 மணி வரையான காலப்பகுதியில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எல்லோரும் இக் கணக்கெடுப்பிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேற்குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தங்களின் வீட்டுத் தோட்டத்திலும் மற்றும் பயிர்ச் செய்கை நிலத்தில் அவதானித்த வனவிலங்குகளின் விபரத்தினை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தினை பயன்படுத்தி அறிக்கையிட்டு அப் படிவத்தினை உங்கள் பகுதியில் உள்ள கிராம சேவகர்/ சமுர்த்தி உத்தியோகத்தர்/ பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்/ விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளரிடம் ஒப்படைக்கவும்.