விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழான கலப்பின சோள விதை உற்பத்தி நிகழ்வின் அறுவடை வயல் விழா

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வவுனியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கலப்பின சோளம் (MI Maize Hybrid 04) விதை உற்பத்தி அறுவடை வயல் விழா 04.10.2023 அன்று புலவனானூர், பூவரசன்குளம் கிராமத்தில் மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு. பொ. அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. சுகந்தினி செந்தில்குமரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.

மேலும் வவுனியா மாவட்ட நவீன மறுவயற்பயிர் விதை உற்பத்தியாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஊடுகளைகட்டும் கருவிகள், வரிசையில் விதையிடும் கருவி, கால்நடை தீவன உற்பத்தியை விரிவாக்கும் நோக்கில் துகளாக்கும் இயந்திரம் மற்றும் விதை பிரித்தெடுக்கும் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த இந் நிகழ்வில் பயனாளிகளும், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களும், விவசாய நவீனமயமாக்கல் திட்ட உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.