வவுனியா மாவட்டத்தில் தேசிய களை நெல் விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடாத்தப்பட்ட களைநெல் விழிப்புணர்வு நிகழ்வு

வயல் நிலங்களில் களை நெல்லின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் நாடளாவிய களை நெல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நமது வவுனியா மாவட்டத்தில் 27.06.2025, வெள்ளிக்கிழமையன்று விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று மடுக்கந்தை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஒழுங்குசெய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது.

இந் நிகழ்வின் ஆரம்பத்தில் விவசாயிகள் நேரடியாக வயல் நிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு களை நெல்லினை இனங்காண்பது, அதனைக் கட்டுப்படுத்துவது மற்றும் எதிர்காலங்களில் களை நெல்லின் பரவலைத் தடுப்பது தொடர்பான விளக்கங்கள், பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. சு.ஆ.N.ஆர். சேனநாயக்க அவர்களினால் வழங்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து மடுக்கந்தை கமநல சேவைகள் நிலைய கேட்போர் கூடத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு களை நெல் தொடர்பான மேலதிக விளக்கங்கள் அளிக்கப்பட்டிருந்ததோடு விவசாயிகனின் சந்தேகங்களும் தீர்த்துவைக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் திரு. P.யு. சரத்சந்திர அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன் விவசாயிகள், விவசாயத் திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்கள், கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்கள், நெல் ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்கள், விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் அத்தாட்சிப்படுத்தல் சேவை நிலை உத்தியோகத்தர்கள், விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் வவுனியா மாவட்ட விவசாயக் கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.