வவுனியா மாவட்டத்தில் சேதனப் பசளை மற்றும் சேதனப் பீடைநாசினி உற்பத்தியினை அதிகரிக்கும் முகமாக சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தித் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 27.01.2022 ஆம் திகதி நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு. மு. திலீபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், திரு. ளு. சிவகுமார், மாகாண விவசாயப் பணிப்பாளர் (வ.மா) மற்றும்; கலாநிதி. மு. யோகராஜா, பிரதிப் பணிப்பாளர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம், வவுனியா ஆகியோர் விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
கூட்டுப்பசளை, மண்புழு உரம், அசோலா உற்பத்தியாளர்கள் மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தியாளர்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களும் மானிய அடிப்படையில் தூர்வையாக்கும் இயந்திரம் மற்றும் உயர் அடர்த்திகொண்ட பொலித்தீன் தொட்டிகளும் வழங்கப்பட்டன. இத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கென 35 தூர்வையாக்கும் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததுடன் அதில் 20 இயந்திரங்கள் மானிய அடிப்படையில் தனிப்பட்ட உற்பத்தியாளர்களுக்கும் ஏனையவை இலவசமாக இளம் விவசாயிகள் கழகங்களுக்கும், சங்கங்களுக்கும், நகர சபைகளுக்கும், விவசாய பயிற்சி நிலையம் மற்றும் அரச விதை உற்பத்திப் பண்ணைகளுக்கும் வழங்கப்பட்டது.