வர்த்தக ரீதியிலான செவ்வாழைச்செய்கை என்னும் கருப்பொருளிலான வயல் விழா

கிளிநொச்சி மாவட்ட அன்புபுர வீதி, முழங்காவில் பகுதியில் உள்ள திரு.தம்பிப்பிள்ளை சேகர் அவர்களுடைய GAP Certified விவசாயப்பண்ணையில் ‘வர்த்தக ரீதியிலான செவ்வாழைச்செய்கை என்னும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வானது 03.04.2024 அன்று காலை 9.30 மணியளவில், திரு.மகானந்தன் மகிழன் (விவசாயப் போதனாசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி சுகந்தினி செந்தில்குமரன் (விவசாயப்பணிப்பாளர், வடக்கு மாகாணம்.) கலந்து கொண்டதுடன், பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி. ஜெகதீஸ்வரி சூரியகுமார், திருமதி. லோகா பிரதீபன்(சிரேஸ்ட விரிவுரையாளர்), கிளிநொச்சி மாவட்ட சிறந்த விவசாயத்துக்கான உத்தியோகஸ்தர், முழங்காவில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
மேலும் இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்,விவசாயிகள்,பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இவ் வயல்விழா நிகழ்வின்போது பின்வரும் விவசாய நுட்ப முறைகள் களப்பார்வை செய்யப்பட்டதும் குறப்பிடத்தக்கது.

களப்பார்வைகள்.

  • வர்த்தக ரீதியிலான செவ்வாழைச்செய்கை
  • றொபெஸ்ரா வாழைச்செய்கை
  • வாழை வர்க்கத்துண்டம்
  • மாதுளை,கொய்யா செய்கைத்துண்டம்
  • சிறந்த விவசாய நடைமுறை பழப்பயிர்ச்செய்கை
  • மா செய்கைத்துண்டம்
  • சைபர் விரிவாக்க அலகு
  • பயிர்ச்சிகிச்கை