வர்த்தக சங்கத்துடனான கலந்துரையாடல்

யாழ் வர்த்தக சங்கத்தினருக்கும் வடமாகாண கௌரவ ஆளுநருக்குமிடையில் வர்த்தக துறையில் நகைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று கௌரவ ஆளுநர் திருமதி P. S. M. சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 19 நவம்பர் 2020 அன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
நகைத் தொழிலாளர்களின் கொள்வனவு, விற்பனை செயற்பாடுகளின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட இவ் அமர்வில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவி செயலாளர், யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொலிஸ் தரப்பினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நகைக் தொழிலாளர்கள் கொள்வனவு, விற்பனை நடவடிக்கைகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக கட்டாயமாக குறித்த நபரின் ஆள் அடையாள அட்டைப் பிரதி, முகவரி, தொலைபேசி இலக்கம், நகையின் அளவு மற்றும் நகையின் புகைப்படம் என்பனவற்றை விலைப்பட்டியலுடன் இணைக்க வேண்டும் என கௌரவ ஆளுநர் அவர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதன் மூலம் திருடப்பட்டு விற்பனைக்கு வரும் நகைகள் மற்றும் அதன் உண்மையான உரிமையாளர்கள் போன்ற விபரங்களை இலகுவில் கண்டறிந்து பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளி மாவட்டங்கள், மாகாணங்களிலிருந்து யாழ் மாவட்டத்திற்குள் கடமை நிமிர்த்தம் வருகைதரும் பொலிஸ் தரப்பினர் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு குறித்த விடயம் தொடர்பாக தெரியப்படுத்தும்படியும், கடைகள் மற்றும் போக்குவரத்து நேரங்களில் இடம்பெறும் களவுளை கட்டுப்படுத்த, பொலிஸ் தரப்பினருடன் இணைந்து குறித்த எல்லைக்கு பொறுப்பான கடமையிலுள்ள காவலாளியும் கண்காணிப்பு மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.
அத்துட ன் CCTV கமராக்களின் செயற்பாடுகளையும் அடிக்கடி அவதானிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது.