தொழிற்துறைத் திணைக்களத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட வடமாகாண கைத்தறி நெசவுப் போட்டியானது 18.10.2022ம் திகதி அன்று ஆசிரியர் பயிற்சிகூடம் நல்லூரில் நடாத்தப்பட்டது. பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த நெசவு உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களானது புடைவை கைத்தொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடுவர் குழுமத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களால் வழங்கப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 31 வெற்றியாளர் பரிசில் வழங்குவதற்க்கு தகுதியானவர்களென தீர்மானிக்கப்பட்டது.
மேலும் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 26.11.2022ம் திகதி யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ்விருது வழங்கும் நிகழ்வில் 31 நெசவுத் தொழில் முயற்சியாளர்களும் வெற்றிப் பரிசில்களைப் பெற்றுக் கொண்டதுடன் மேலும் திணைக்கள நெசவு நிலையங்களில் 10 வருடங்களுக்கு மேலாக துண்டுக்கூலி அடிப்படையில் நெசவு உற்பத்திகளை மேற்கொண்டுவரும் நெசவாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு திருமதி. ரூபினி வரதலிங்கம் வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்களும் அதிதியாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.