கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்கந்தபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் வரிசை முறையிலான பயறுச் செய்கை தொடர்பான வயல் விழா நிகழவானது 07.08.2024 அன்று காலை 11 மணியளவில் ம.புவநேந்தின் அவர்களினது தோட்டத்தில் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.சூ.ஜெகதிஸ்வரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.விஜிதரன் (கமநல அபிவருத்தி உத்தியோகத்தர்,அக்கராயன் குளம்) அவர்கள் கலந்து கொண்டதுடன், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், பகுதிக்குரிய கிராம சேவகர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் வயல் விழா நிகழ்வில் வரவேற்புரை திரு.ல.அஸ்லி (தொழலிநுட்ப உதவியாளர்;)அவர்களாலும் தலைமையுரை திருமதி.சூ.ஜெகதீஸ்வரி (பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்) அவர்களினாலும் நிகழ்த்தப்பட்டது.அத்துடன் வரிசை முறையிலான பயறுச்செய்கை தொடர்பான விளக்கங்களும் அதன் நன்மைகள் பற்றியும் திருமதி.ரூ.ரூபி (பாட விதான உத்தியோகத்தர்-பயிர் பாதுகாப்பு) அவர்களினால் தெளிவான விளக்கம்; அளிக்கப்பட்டதுடன் வரிசை முறையிலான பயறுச் செய்கையின் களம் பார்வையிடல் இடம் பெற்றது பின்னர் விவசாயிகள் கருத்துரை மற்றும் விருந்தினர்கள்; உரையுடன் நிகழ்வானது நிறைவு பெற்றது.