வட மாகாண விவசாய திணைக்களத்தின் நடமாடும் சேவை

வட மாகாண விவசாய திணைக்களத்தின் யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தால் 04.06.2021 ஆம் திகதி தொல்புரம் விவசாய போதனாசிரியர் பிரிவில் விவசாயிகளிற்கான விதை, நடுகைப் பொருட்கள் விவசாய நடமாடும் சேவை முலம் விற்பனை செய்ப்பட்டது.

இந் நடமாடும் சேவையில் யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன், உதவி விவசாய பணிப்பாளர் திருமதி. நடனமலர் விஐயன், பாடவிதான உத்தியோகத்தர் திரு. ந.நிரஞ்சன்குமார் மற்றும் தொல்புரம் விவசாய போதனாசிரியர் திரு.க.நிரோஐன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

07.06.2021 ஆம் திகதி சாவகச்சேரி, எழுதுமட்டுவாழ் விவசாய போதனாசிரியர் பிரிவில் விவசாய போதனாசிரியர் ஒழுங்குபடுத்தலின் கீழ் இவ் நடமாடும் சேவையானது நடைபெற்றது.

அச்சுவேலி தாய் தாவர பண்ணை, மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் மற்றும் யாழ் குடா விதை உற்பத்தியாளர் சங்கத்தில் உற்பத்தி செய்யப்பட்ட விதை மற்றும் நடுகைப் பொருட்கள் இந் நடமாடும் சேவையில் விவசாயிகளிற்கு விநியோகிக்கப்பட்டன.

பொதி செய்யப்பட்ட மிளகாய், கறிமிளகாய், கத்தரி, புதினா, சண்டி, மூலிகை கன்றுகள், பழ மரக் கன்றுகள் மற்றும் மரக்கறி விதைகளான கத்தரி, வெண்டி, கீரை, புடோல், பூசணி, பயிற்றை, பாகல், தக்காளி, கறிமிளகாய், சிறகவரை என்பன விற்பனை செய்யப்பட்டது.

நாளைய தினம் 08.06.2021 செவ்வாய்கிழமை நல்லூர் பிரதேசத்திலும் 09.06.2021 புதன்;கிழமை தெல்லிப்பளை பிரதேசத்திலும்; நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.