வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாணத் தைப்பொங்கல் விழா தமிழர் மரபுகளின் படி வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (16.01.2024) நடைபெற்றது.
கலாசார முறைப்படி வடமாகாண ஆளுநர் தலைமையில் பூநகரி ஜெயபுரம் நெல் வயலில் நெல் அறுவடையும் அதன் பின்னர் அதனை சூரியபகவானுக்கு அர்ப்பணிக்கும் பொங்கல் பொங்கும் நிகழ்வு ஜெயபுரம் அம்மன் ஆலயத்திலும் நடைபெற்றது.
இதன் பின்னர் கலாசார கூறுகளுடன் கூடிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஆளுநர் உட்பட அழைக்கப்பட்ட அதிதிகளுக்கு கௌரவிப்பும் வழங்கப்பட்டது.



















