வடமாகாணத்திலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் போருக்கு பின்னரான இத் தேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு நன்மை பயக்ககூடிய வகையிலும் மனிதாபிமானத்துடனும் பணியாற்றவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.
யாழ் நூலக கேட்போர்கூடத்தில் 31 மே 2019 அன்று நடைபெற்ற கொள்முதல் நடைமுறை மற்றும் ஒப்பந்த நிர்வாக பாடநெறியை (CIPPCA 2018/2019) பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் நீங்கள் கற்றுக்கொண்ட இந்த விடயங்கள் வெறுமனே ஒரு காரியாலயத்தின் அடிப்படையாக மட்டுமல்ல . ஒரு நாகரீகத்தின் சமிக்கையாக இருக்கவேண்டும் என்று ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.
எந்த மாதிரியான சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்கவேண்டும். அது உங்களுக்கும் உங்கள் நாகரீகத்திற்கும் உங்களை பயிற்றுவித்த ஆசானுக்கும்,அடிப்படையாக உங்கள் மனசாட்சிக்கும் மத்தியிலே உள்ள ஒரு கேள்வி. என்னுடைய பிரார்த்தனை எல்லாமே நீங்கள் நல்ல ஒரு நாகரீகத்தின் பயணத்திற்கு அடிப்படையாக இருப்பீர்களென எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.
-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு