வடக்கு மாகாணத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை(PSDG) மற்றும் பிரமாண அடிப்படையிலான கொடை(CBG) மூலம் வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூலதன அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் வேலைகள் நிறைவடைந்தும் திறைசேரியிடம் இருந்து கட்டுநிதியானது முழுமையாக கிடைக்கப்பெறாமையினால் ஒப்பந்தகாரர்களிற்கு கொடுப்பனவு செய்யப்பட முடியாமல் இருந்த உறுதிச்சிட்டைகளின் பெறுமதியானது ரூபா 898.4 மில்லியன் ஆகும்.
இவ்வாறான பெருந்தொகை நிலுவை ஒப்பந்தகாரர்களின் நிதி இயலுமையை பாதித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற கோரிக்கையை கருத்திற் கொண்டு ஒப்பந்தகாரர்களின் இடரினை தீர்ப்பதற்காக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் மார்ச் மாதத்திற்கு முன்னர் மாகாண நிதியில் இருந்து முற்பணமாக வழங்கி ஈடுசெய்யுமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.
கௌரவ ஆளுநர் அவர்களின் ஆலோசனைக்கு இணங்க மேற்படி ஒப்பந்தகாரர்களின் நிலுவைத் தொகையாவும் 2019 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்திற்குள் முழுமையாக வழங்கப்பட்டு கொடுப்பனவு முடிவுறுத்தப்பட்டுள்ளதுடன் ஒப்பந்தகாரர்களின் நிதி நெருக்கடியும் தீர்க்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 2019 ஆம் ஆண்டிற்கானபுதிய மூலதன வேலைத்திட்டங்கள் யாவும் எவ்வித தடங்கலும் இன்றி நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு