வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூகசேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சினால் பால்நிலை சார் வன்முறையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், பெண்கள் மற்றும் நலிவுற்ற கர்ப்பிணிகளுக்கு உடனடி அவசரப் பொதிகள் தேவையான நேரத்தில் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் வருடாவருடம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அந்த வகையில் எதிர்வரும் காலப்பகுதிக்கு மாவட்டச் செயலாளர்களின் கோரிக்கைக்கமைவாக கொள்வனவு செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்ட பொதிகள் அமைச்சின் உதவிச்செயலாளர் திரு.மா.முரளி அவர்களது தலைமையில் வடமாகாணத்தின் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களுக்குரியவை 09.12.2025 மற்றும் 10.12.2025 ஆகிய தினங்களில் அந்தந்த மாவட்டச்செயலகங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் மன்னார் மாவட்டத்திற்கென மொத்தமாக 100 பயனாளிகளுக்கு ரூபா 978,123.00 மொத்தப் பெறுமதியுள்ள அவசரப்பொதிகள் மன்னார் மாவட்டச்செயலாளர் திரு. மு. கனகேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கென மொத்தமாக 115 பயனாளிகளுக்கு ரூபா 1,155,039.90 மொத்தப் பெறுமதியுள்ள அவசரப்பொதிகள் கிளிநொச்சி மாவட்டச்செயலாளர் திரு. எஸ்.முரளிதரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கென மொத்தமாக 120 பயனாளிகளுக்கு ரூபா 1,151,851.70 மொத்தப் பெறுமதியுள்ள அவசரப்பொதிகள் முல்லைத்தீவு மாவட்டச்செயலாளர் திரு. ஏ. உமாமகேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்திற்கென மொத்தமாக 100 பயனாளிகளுக்கு ரூபா 1,011,892.10 மொத்தப் பெறுமதியுள்ள அவசரப்பொதிகள் வவுனியா மாவட்டச்செயலக மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.





