வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆகப் பணியாற்றி ஓய்வுபெறும் எஸ்.குகதாஸ் அவர்களின் பிரிவுபசார விழா

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆகப் பணியாற்றி ஓய்வுபெறும் எஸ்.குகதாஸ் அவர்களின் பிரிவுபசார விழா வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (22.07.2025) இடம்பெற்றது.

விழாநாயகனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த ஆளுநர் இங்கு உரையாற்றுகையில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராக தான் பணியாற்றிய காலத்தில் குகதாஸ் அவர்கள் அங்கு கடமைபுரிந்ததை நினைவுகூர்ந்தார். எப்போதும் நேர்ச்சிந்தனையுடன் பயணிக்கும் அவர், எந்தவொரு விடயத்தையும் எவ்வாறு செய்து முடிக்கலாம் என்ற சிந்தனையுடனேயே செயற்படும் ஒருவர் எனவும் ஆளுநர் புகழாரம் சூட்டினார். நேர்மை – திறமை – எதையும் பிற்போடாமல் உடனேயே செய்து முடிக்கும் ஆற்றல் என்பன குகதாஸூக்கு உரிய குணங்கள் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இவர் பலருக்கு முன்னுதாரணமானவர் எனவும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கணக்காளர்கள், குகதாஸ் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.