வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் பொதியிடல் தொழில்நுட்பப் பயிற்சியானது வழங்கப்பட்டது

வட மாகாணத்தில் உணவு சார் உற்பத்தி முயற்சியில் ஈடுபடும் சிறுதொழில் முயற்சியாளர்களால் கோரப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன் வடமாகாணத்தில் மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட உணவு பொதியிடல் தொழில்நுட்பங்கள் தேவைப்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொதியிடல் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 13.08.2024 ஆம் திகதியன்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 35 தொழில்முயற்சியாளர்களுக்கும் மன்னார் மாவட்டத்தில் 14.08.2024 ஆம் திகதி மாவட்ட அலுவலகம், தொழிற்துறைத் திணைக்களம், மன்னாரில் 23 தொழில்முயற்சியாளர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 15.08.2024 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 26 தொழில்முயற்சியாளர்களுக்கும் வழங்கப்பட்;டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் மாவட்ட செயலகத்தின் திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் மூன்று பொதியிடல் பயிற்சிகள் வழங்கப்பட்டன. முதலாவது பொதியிடல் பயிற்சியானது 16.08.2024 ஆம் திகதி 21 தொழில்முயற்சியாளர்களுக்கும் இரண்டாவது பொதியிடல் பயிற்சியானது 17.08.2024 ஆம் திகதி 22 தொழில்முயற்சியாளர்களுக்கும் மூன்றாவது பொதியிடல் பயிற்சியானது 18.08.2024 ஆம் திகதி 27 தொழில் முயற்சியாளர்களுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 19.08.2024 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27 தொழில்முயற்சியாளர்களுக்கும் குறித்த பயிற்சியானது வழங்கப்பட்டது.

இப்பயிற்சியின் நிறைவில் பயனாளிகளிடம் இருந்து சிறப்பான பின்னூட்டல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பயிற்சிநெறி நிகழ்வின் சில பதிவுகள் –

வவுனியா மாவட்டம்

மன்னார் மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டம்

யாழ்ப்பாண மாவட்டம்