வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் திங்கட் கிழமை காலை (10.02.2025) இடம்பெற்றது.
வடக்கிலுள்ள மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர்கள் பல்வேறு தேவைகளை நிறைவேற்றித்தருமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைத்தாக சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஆளுநரிடம் தெரிவித்தார். அத்துடன் தமது உதவிகள் வழங்கல்களில் எந்தவொரு பாரபட்சமும் இல்லை என்பதையும் ஆளுநருக்கு அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்தில் விவசாயம், சுற்றுலாத்துறை அபிவிருத்தியின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர், சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தினார். மேலும் வடக்கில் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலனும் பங்கேற்றார்.




