வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் சாரதிகளில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்குமாறு ஆளுநர் பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு அகில இலங்கை சாரதிகள் சங்கத்தினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை 11.03.2025 அன்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது, வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் சாரதிகளில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்குமாறு ஆளுநர் சுகாதாரத் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்தார்.