யாழ்ப்பாண மாவட்ட ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட சமூக மட்ட அமைப்பிற்கும், மருதங்கேணியில் அமைந்துள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கும் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் தையிட்டி பகுதியைச் சேர்ந்த ஒன்பது  பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் உள்ளடங்களாக பத்து அங்கத்தவர்களைக் கொண்டு மணப்பெண் அலங்காரப் பொருட்கள் மற்றும் கைவினை சார் பொருட்களின் உற்பத்திகளைச் செய்யும்  பனிமலை மாதா  மகளிர் விவகாரக் குழு, தையிட்டி கிழக்கு, தெல்லிப்பளை என்ற அமைப்பிற்கு  அவர்களின்  உற்பத்தியினை மேலும் விருத்தி செய்வதற்கென (மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.200,185 பெறுமதியான இயந்திரங்கள்  மற்றும்  உபகரணங்கள் 2018/08/27 அன்று வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் திருமதி. கோகிலதர்சன் சங்கீதா அவர்களும் கலந்து கொண்டார்.

அத்துடன் அன்றைய தினம் மருதங்கேணி பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பெண்கள் பாதுகாப்பு இல்ல சேவை நாடிகளின் சுயதொழில் (முத்து ஆபரணங்கள் மற்றும் சிரட்டை உற்பத்திப் பொருட்கள்) மேம்பாட்டிற்கென ரூபா.51,975 பெறுமதியான உபகரணங்கள் மருதங்கேணி பிரதேச செயலகரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரும் கலந்து கொண்டார்.