வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும் இந்திய துணைத்தூதர் ஶ்ரீமான் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் பதில் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், யாழ் மாநகர சபை ஆணையாளர், கலைத்துறை சார்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆகியோர் 05.11.2024 அன்று ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்டு உள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் மற்றும் கலாசார நிகழ்வுகளை முன்னெடுத்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது கலை, கலாசார, நிகழ்வுகளை நடத்துதல், உரியவாறு ஒழுங்கமைத்தல் தொடர்பிலும், சமூகத்தின் பாவனைக்கு விடுதல் மற்றும், கலாசார மத்திய நிலையத்தினை தொடர்து இயங்குநிலையில் வைத்திருத்தல் தொடர்பிலும் உரையாடப்பட்டது. கலாசார மத்திய நிலையத்தினை உரிய திணைக்களங்களிடம் ஒப்படைத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.