முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கண்காணிப்புப் பயணம் மேற்கொண்டார். இதன்போது மருத்துவமனையின் செயற்பாடுகளைப் பார்வையிட்டதுடன் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் இதன்போது நன்கொடையாளர் ஒருவரால் மருத்துவமனைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளை வழங்கும் நிகழ்விலும் பங்கேற்றார்.
இதன்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலர், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அத்தியட்சகர் ஆகியோர் பங்கேற்றனர்.