முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் வயல்விழாவும் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் அவர்களின் தலைமையில் ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 23.05.2019 ஆம் திகதி  ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் இ.கோகுலதாசன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர். செ. கௌரிதிலகன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் இ.ரமேஸ் மற்றும் முல்லைத்தீவு பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர் இராஜகாந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களுடன் விவசாயத் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மற்றும் முகாமைத்துவ உதவியாளர்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இக் கௌரவிப்பு நிகழ்வில் மத்திய விவசாய அமைச்சினால் ‘நாம் வளர்த்து நாம் உண்போம்” எனும் விரைவுபடுத்தும் விவசாய அபிவிருத்தித் திட்டம் – 2018 இன் கீழ் நடாத்தப்பட்ட சிறந்த விவசாயிகள் தெரிவிற்கான மாகாண மட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்ற வெற்றியாளர் ஒருவர் கௌரவிக்கப்பட்டார். இப் போட்டியில் சிறந்த வர்த்தக ரீதியிலான பயிர் செய்கையாளர் வகுதியின் கீழ் ஒலுமடுவைச் சேர்ந்த சத்தியவான் சக்திவேல் என்பவர் வட மாகாணத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்றுக் கொண்டார். இவருக்கு சான்றிதழும் பணப்பரிசாக ரூபா. 5,000  பெறுமதி கொண்ட காசோலையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மேலும் வடமாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சிறந்த வீட்டுத் தோட்டச் செய்கையாளர்கள் மற்றும் சிறந்த சேதன விவசாயச் செய்கையாளர்களும் மாகாண விவசாயத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சிறந்த நிலக்கடலைச் செய்கையாளர்கள் மற்றும் உயர் செறிவான முறையில் மாமரச் செய்கையில் சிறப்பாக ஈடுபடுபவர்கள் என 04 தலைப்புக்களின் கீழ் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட 12 வெற்றியாளர்களிற்கும் வெற்றிக்கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசு என்பன வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். பணப்பரிசாக முதல் மூன்று வெற்றியாளர்களிற்கும் முறையே ரூபா. 15,000, ரூபா. 12,500, ரூபா. 10,000  எனும் அடிப்படையில் காசோலைகள் வழங்கப்பட்டன. விவசாயப் போதனாசிரியர் பிரிவு மட்டத்தில் வெற்றி பெற்ற 167 வெற்றியாளர்கள் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.

ஒவ்வோர் தலைப்புக்களின் கீழும் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட வெற்றியாளர்களின் விபரங்கள் கீழ் வருமாறு

  1. சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர்;
தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் கந்தையா பழனிநாதன் கொக்குத்தொடுவாய் மத்தி
02 2ம் இடம் சபரகுமி ரலலகி பிரதீப குமுதினி கலம்பவேவா வெலிஓயா
03 3ம் இடம் திருமதி. விக்கினேஸ்வரன் ஜெகதீஸ்வரி 1/2 ஏக்கர் திட்டம், தொட்டியடி, விசுவமடு மேற்கு, விசுவமடு
  1. சிறந்த சேதனச் செய்கையாளர்;
தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் செல்வராசா துவாரகன் சிவபுரம், கல்விளான், துணுக்காய்
02 2ம் இடம் திருமதி.  செல்வரத்தினம் தவச்செல்வி வித்தியாபுரம், ஒட்டுசுட்டான்
03 3ம் இடம் ஜோசப் அலெக்ஸ் 9ம் வட்டாரம், மல்லிகைத்தீவு, புதுக்குடியிருப்பு
  1. சிறந்த நிலக்கடலைச் செய்கையாளர்
தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் கந்தசாமி ஜெயராஸ் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய்
02 2ம் இடம் சிவபாலசேகரம்பிள்ளை தனுசீலன் 3 ம் கண்டம், கற்சிலைமடு
03 3ம் இடம் இராஜகோபால் ரகுநாதன்; மூங்கிலாறு தெற்கு, மூங்கிலாறு
  1. உயர் செறிவான முறையில் மாமரச் செய்கையில் சிறப்பாக ஈடுபடுபவர்
தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் சுப்பிரமணியம் சந்திரமோகன் பூதன்வயல், முள்ளியவளை
02 2ம் இடம் மார்க்கண்டு யோகராசா முத்துவிநாயகர்புரம், முத்தையன்கட்டு
03 3ம் இடம் பசுபதி கிஸ்ணபிள்ளை  2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு