மாபெரும் ஆளுநர் வெற்றிக்கிண்ண நிகழ்வு ஆளுநர் தலைமையில் ஆரம்பம்

இறைவன் எனக்கு கொடுத்த சிறிய காலத்தில் உங்கள் சேவகனாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அனேக செயற்திட்டங்களை மேற்கொண்டும் இளைஞர்களுக்காக எதுவும் செய்யவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் இருந்தது அதனை நிவர்த்தி செய்யும் முகமாக இளைஞர்களுக்கான ஆரம்ப படியாக இந்த விளையாட்டு முயற்சி அமைந்துள்ளது என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.

ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவில் மாபெரும் ஆளுநர் வெற்றிக்கிண்ண நிகழ்வு கௌரவ ஆளுநர் தலைமையில் 05 ஒக்ரோபர் 2019 அன்று ஆரம்பமானபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத் திணைக்களம் ஆகியன இணைந்து வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான இந்த நிகழ்வில் வடமாகாணத்தின் வலைப்பந்தாட்ட சாதனைப்பெண்மணிகளான தர்ஜினி சிவலிங்கம் இ எஸ். எழிலேந்தினி மற்றும் வேணுகா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் இஇவ் விளையாட்டின் மூலம் நம் மத்தியில் இருக்கும் திறமைகளை நாம் பெற்றுக்கொள்கின்றோம் . நம் மத்தியில் ஒற்றுமையை வளர்த்துக்கொள்கின்றோம் . நம் திறமைகளை உலகத்திற்கு எடுத்துக்காட்டக்கூடியதாகவுள்ளது என்பதே முக்கியத்துவமாகும் . எம்மண்ணை சேர்ந்த சாதனைபடைத்த இந்த பிள்ளைகள் போலவே இன்னும் பலர் திறமைசாலிகளாக உருவாகி நம் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் இவிளிம்பிலே உள்ள நம் இந்த தேசத்தை மீண்டும் கொடி கண்டதேசமாக மாற்றவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று குறிப்பிட்டார்.

இவ்மாபெரும் ஆளுநர் வெற்றிக்கிண்ணபோட்டியில் வவுனியா , மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ,யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான கரப்பாந்தாட்ட போட்டியில் 22 விளையாட்டுக்கழகங்களும் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் 11விளையாட்டு கழகங்களும் பங்குபற்றின. இப்போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் 06 ஒக்ரோபர் 2019 அன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் வடமாகாண மக்கள் சார்பாக வலைப்பந்தாட்டத்தில் சாதனை படைத்த பெண்மணிகள் மூவருக்கும் கௌரவ ஆளுநர் அவர்கள் நினைவுப்பரிசினை வழங்கி கௌரவித்தார்

இந்த நிகழ்வில் கௌரவ ஆளுநரின் செயலாளர் , கல்வி அமைச்சின் செயலாளர் , வடமாகாண விளையாட்டுத்திணைக்களப்பணிப்பாளர் , வடமாகாண விளையாட்டுத்திணைக்கள உதவிப்பணிப்பாளம் , இயக்குனர் இமயம் பாரதிராஜா , இயக்குனர் அமீர் மற்றும் வடமாகாணத்தின் விளையாட்டு கழக வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.