மாதிரி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு – கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத் திணைக்களத்தின் கீழ் உள்ள கனகாம்பிகைக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில்  உள்ள அம்பாள் நகர் கிராம சேவையாளர் பிரிவில். 27.06.2025 அன்று மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை ஊடாக மாதிரி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 20 விவசாயிகளுக்கு  தலா 0.5 Ac  விஸ்தீரணத்திற்கு ஏற்ப நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வின் போது நிலக்கடலை விளைசசல் அதிகரிப்பதற்கான விசேட பயிற்சி வகுப்பு நடாத்தப்பட்டு விதைகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில்  பிரதி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், பயனாளிகள் மற்றும் விவசாயிகள் எனப்பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.