மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்
ஆணையாளர்
திருமதி. சுஜீவா சிவதாஸ்
ஆணையாளர்
தொ. பே: 0212057102
கைபேசி : 0777724479
தொ. நகல்: 0212057103
மின்னஞ்சல்: pccsnp@gmail.com
பணிநோக்கு:
சிறுவர் சம்பந்தமான தேசிய, மாகாண கொள்கைகளை அமுல்படுத்த உதவுதல் மற்றும் அவர்களின் உரிமைகளிற்கு ஆதரவளித்துப் பாதுகாப்பளிக்கையில் பாதுகாப்பற்ற சிறார்கள், துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறார்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சிறார்கள் ஆகியோருக்கு சம வாய்ப்பினை அளித்தல்.
குறிக்கோள்கள்
- சிறுவருக்கான சட்டப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
- நன்னடத்தைப் பாதுகாவல் கட்டளையை ஆக்குவதற்கு நீதிமன்றத்திற்கு உதவியளித்தல்.
- சிறுவருக்கென மாற்றீடான கவனிப்பு முறைமையை ஏற்பாடு செய்தலும் வசதியளித்தலும்.
- சிறுவர் தவறாளர்களை புனர்வாழ்வு மற்றும் புனருத்தாரணம் கருதி நிறுவன மயப்படுத்தலும் அவர்களுக்கு கல்வி மற்றும் வாழ்க்கைத் தொழில்சார் பயிற்சியை ஏற்பாடு செய்தலும் மீள சமூகமயப்படுத்தலும்.
- பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான உள சமூக ஆதரவை ஏற்பாடு செய்தல்.
- வறுமை அல்லது வேறு சமூக தேவைப்பாடுகள் காரணமாக வாழ்வில் சீர்குலையக்கூடிய சிறுவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்தலும், சிறுவர் உழைப்பைத் தடுத்தலும்.
- சிறுவர் தொடர்பில் மிகவும் கருணை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நீதிசார் நடவடிக்கைகளை எடுத்தல் அத்துடன்
- தேவையிலுள்ள சிறுவருக்குச் சேவைகளை ஏற்பாடு செய்தல்.
.
பிரதான செயற்பாடுகள்:
- சிறுவர் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கென நடவடிக்கை எடுத்தலும், அனாதை மற்றும் கைவிடப்பட்ட சிறுவர் அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கவனிப்பு மற்றும் பாதுகாப்பிற்கென நீதிமன்றக் கட்டளையைப் பெறுதல்.
- துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய சிறுவரொருவரின் உரிமை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கின்ற முறைகளைப் பற்றியும் விழிப்புணர்வொன்றை உருவாக்குதலும், சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்பு தொடர்பிலான ஆராய்ச்சியை கொண்டு ஆற்றுப்படுத்தலும்.
- தேவையிலுள்ள சிறுவரின் கவனிப்பு மற்றும் பாதுகாப்பை பெற்றுக்கொள்ளுவதற்கான தோதான படிமுறைகளை எடுத்தலும், தமது பெற்றோருக்கு கீழ்படிவல்லாத, பாடசாலைக்கு ஒழுங்கீனமான, பிடிவாதமான, சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட சிறுவர்களை ஆற்றுப்படுத்தலும்.
- சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்த மாகாண, மாவட்ட அல்லது பிரதேசக் குழுக்களையும் அதன் உப குழுக்களையும் தாபித்தல்.
- சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான முறைப்பாடுகளை பொதுமக்களிடமிருந்து பெறுதலும் அவசியமானவிடத்து, தோதான அதிகாரத் தரப்பினருக்கு முறைப்பாடுகளை ஆற்றுப்படுத்தலும்.
- தேவையுள்ள சிறுவருக்கு அவசரமானதையும் மற்றும் வேறு உதவிகளையும் வழங்குதலும் சிறுவர் கவனிப்புச் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களில் தேவைநாடும் சிறுவர்களை அனுமதித்தலும்.
- நிறுவன மயப்படுத்தப்பட்ட சிறுவர்களை அவர்களின் குடும்பத்துடன் மீள ஒருங்கிணைப்பதற்கென வசதியளித்தலும் உதவி வழங்குதலும்.
- மகவேற்புக்கு உதவியளித்தலும் வசதியளித்தலும்.
- சட்ட உயர்தொழிலர் மற்றும் சட்டம்சாரா உயர் வாண்மையுளரின் சேவைகளைப் பெறுதல்.
- சிறுவர் கவனிப்புச் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களுக்கு உரிமம் அல்லது சான்றிதழ்களை வழங்குதலும் ஏதேனும் சேவைகளுக்கு அங்கீகாரத்தை அளித்தலும் அத்துடன் அத்தகைய நிறுவனங்களை மேற்பார்வை செய்தலும் கண்காணித்தலும்.
- சிறுவர் கவனிப்புச் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களுக்கு வழங்குகின்ற சேவைகளுக்கென ஏதேனும் கட்டணத்தை அறவிடுதல் அல்லது விதிப்பனவை விதித்தல்.
- 1944 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க தவறாளர்களின் நன்னடத்தைப் பாதுகாவல் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக, நீதிமன்றத்தினால் ஆக்கப்படும் நன்னடத்தை பாதுகாவல் கட்டளையினைப் பின்பற்றி எவரேனும் தவறாளரின் மேற்பார்வையைப் பொறுப்பெடுத்தலும், கட்டளையில் உட்புகுத்தப்பட்ட நிபந்தனைகள் முழுமையாகவும் கண்டிப்பாகவும் பின்பற்றப்படுகின்றனவா என அவதானித்தல்.
- நன்னடத்தை பாதுகாவல் கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவாறான அல்லது அலுவலர் பொருத்தமானதெனக் கருதக்கூடியவாறான அதற்கமைவாக அத்தகைய இடைவெளிகளில் எவரேனும் தவறாளரைப் பார்வையிடுதலும், அவரிடமிருந்து அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளுதலும்.
- எவரேனும் தவறாளரின் நடத்தை மற்றும் முன்னேற்றம் தொடர்பில்; அத்தகைய காலாகால அறிக்கைகளைச் தயாரித்தல்.
- மேற்பார்வையின் கீழுள்ள தவறாளருக்கு மதியுரையளித்தல், உதவியளித்தல் மற்றும் நட்பாக நடாத்தல் அத்துடன் அவசியமானவிடத்து, அவருக்கு தொழில் மற்றும் தங்குவதற்கான உறைவிடத்தை பெற்றுக்கொடுக்க முயற்சித்தல்.
- நீதிமன்றத்திற்கு எவரேனும் தவறாளரின் குணநலன், முன்னொழுக்காறு, சூழல் மற்றும் உள அல்லது உடல் நிலை தொடர்பிலான எல்லா அத்தகைய தகவல்களையும்; சமர்ப்பித்தல்@ நன்னடத்தைப் பாதுகாவலுக்கென வழக்கின் பொருத்தமான தன்மை பற்றி எவரேனும் தவறாளரின் மேற்பார்வை நன்னடத்தைப் பாதுகாவல் அலுவலரால் பொறுப்பேற்கமுடியுமா என்பது பற்றியும் நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தல்.
- திணைக்கள உள்ளக நிருவாகத்திற்கான அவசியமான விதிகளை உருவாக்குதல். அத்துடன்
- பொதுவாக திணைக்களத்தின் குறிக்கோள்களை எய்துவதற்கு அவசியமானவாறான அத்தகைய வேறு எல்லாக் கருமங்களையும் புரிதல்
தொடர்பு அட்டவணை
அஞ்சல் விலாசம் : மீனாட்சி அம்மன் கோவில் வீதி, பண்ணை, யாழ்ப்பாணம்
பொது தொ.பே இல: 0213215540
தொ.நகல். :0212057103
மின்னஞ்சல்: pccsnp@gmail.com
Post Views: 3,509